நாடாளுமன்றத்துக்கு பிரியங்கா காந்தி கொண்டு வந்த 'அதானி- மோடி' ஜோல்னா பை.. பாராட்டிய ராகுல் காந்தி!
டெல்லி: நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, அதானி- மோடி படங்களை அச்சிட்ட பையுடன் வருகை தந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதானி - மோடி பை பை என்ற வாசகமும் இந்த பையில் இடம் பெற்றிருந்தது. பிரியங்கா காந்தி எம்பியின் இந்த பையை பாராட்டிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இதனை வடிவமைத்தவர் யார் என்பது குறித்தும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 20-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்தே அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உபி. சம்பல் வன்முறை உள்ளிட்டவைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் அமளிக்கு இடையே சிறிது நேரம் நடைபெற்றாலும் பெரும்பாலும் முடக்கப்பட்ட நிலையில்தான் இருந்து வருகிறது. இன்றும் நாடாளுமன்ற சபைகள் முடங்கி இருக்கின்றன.

அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் நாள் தோறும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது, அதானி- மோடி முகமூடிகளை காங்கிரஸ் எம்பிக்கள் அணிந்திருந்தனர். அவர்களை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்யும் வகையில் ஓரங்க நாடகத்தை அரங்கேற்றினார்.
இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தி முழக்கமிட்டனர். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளரும் வயநாடு லோக்சபா தொகுதி எம்பியுமான பிரியங்கா காந்தி ஜோல்னா பை (தோள் பை) ஒன்றுடன் வருகை தந்தார். அந்த பையில் அதானி- மோடி படங்கள் ஒரு பக்கம் அச்சிடப்பட்டிருந்தன; பையின் மற்றொரு பகுதியில் அதானி- மோடி பை பை என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.
பிரியங்கா காந்தியின் இந்த பை, இந்தியா கூட்டணி எம்பிக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பையை பார்த்து பாராட்டினார். அத்துடன் இந்த பையை வடிவமைத்தது யார்? என்பது குறித்தும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications