டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தடுப்பூசி சப்ளை.. மிகவும் அழுத்தமாக இருக்கு.. ஓபனாக உடைத்த அதார் பூனவல்லா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் உள்ள இரண்டு கோவிட் தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்ட்டை உற்பத்தி என்பது தேவையை விட குறைவாகவே உள்ளது. இந்நிலையில் தற்போதைய சூழலில் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டியதிருப்பதால், தங்களுக்கு மிகவும் அழுத்தமாக உள்ளது, இதை வெளிப்படையாகவே சொல்கிறேன் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பூனவல்லா இதுபற்றி கூறுகையில், தற்போது மாதத்திற்கு 60 முதல் 65 மில்லியன் டோஸ் வரை உற்பத்தி செய்யும் எங்களின் சீரம் நிறுவனம்,, இதுவரை சுமார் 100 மில்லியன் டோஸை மையத்திற்கு வழங்கியுள்ளது. அதேநேரம் 60 மில்லியனை ஏற்றுமதி செய்துள்ளது - ஆனால் தேவைப்படும் ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்கும் அளவிற்கு உற்பத்தி இல்லை.

உலகில் நேற்று எந்த நாட்டிலும் இல்லாத புதிய உச்சம்.. இந்தியாவில் 1,15,269 பேருக்கு கொரோனா உலகில் நேற்று எந்த நாட்டிலும் இல்லாத புதிய உச்சம்.. இந்தியாவில் 1,15,269 பேருக்கு கொரோனா

"மொத்த உலகிற்கும் இந்த தடுப்பூசி தேவைப்படுகிறது. ஆனால் இந்தியாவின் தேவைகளுக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் (ஆனால்) ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்கும் அளவிற்கு உற்பத்தி இப்போது நடைபெறவில்லை.

அனைவருக்கும் மருந்து

அனைவருக்கும் மருந்து

அனைவருக்கும் தேவையான மருந்தை உற்பத்தி செய்ய எங்களுக்கு 3000 கோடி ரூபாய் தேவை. நாங்கள் இந்தியாவில் சுமார் -1 150-160 ரூபாய்க்கு வழங்குகிறோம். சராசரி விலை சுமார் $ 20 (ரூ. 1,500) ... (ஆனால்) மோடி அரசின் கோரிக்கையை ஏற்று மானிய விலையில் வழங்குகிறோம். நாங்கள் இதுவரை லாபம் ஈட்டவில்லை இதில் நாங்கள் அதிக லாபம் ஈட்டவேண்டும் என்று விரும்பவில்லை. அநேரம் மறு முதலீட்டிற்காவது எங்களுக்கு பணம் வேண்டும்.

மத்திய அரசுக்கு கடிதம்

மத்திய அரசுக்கு கடிதம்

இதற்காக எங்களுககு rs, 3,000 கோடி தேவைப்படுகிறது. அத்துடன் தேவையான மருந்தை உற்பத்தி செய்வதற்கான செயல்முறைக்கு குறைந்தது 85 நாட்கள் ஆகும், ,இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மாதத்திற்கு சுமார் 100 மில்லியன் அளவுக்கு மருந்து உற்பத்தியை உயர்த்த முடியுமென்றாலும் - தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவுக்கு மற்ற உற்பத்தியாளர்களும் தேவைப்படுகிறார்கள்.

பின்னர் விலக்கல்

பின்னர் விலக்கல்

கடந்த மாதம் மத்திய அரசு முக்கிய கோவிஷீல்ட் ஏற்றுமதிகளை இடைநிறுத்துவதாகக் கூறியது ஆனால் இந்தியாவுடனான 'முதல் உரிமைகோரல்' ஒப்பந்தத்தை வெளிநாடுகளக்கு விளக்குவது கடினம் ஆகும். ஏனெனில் அங்கு இது ஒரு டோஸ் கணிசமாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனிடையே தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

நாசி தடுப்பூசி

நாசி தடுப்பூசி

நாங்கள் எந்த நாளிலும் இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தயாரிப்பில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறோம். எங்களின் கோடஜெனிக்ஸ் விரைவில் சோதனை செய்யப்படும்- கோடஜெனிக்ஸ் ஒருமுறை பயன்படுத்தும் அளவிலான நாசி தடுப்பூசியாக இருக்கப் போகிறது, இது ஒரு சாத்தியமான கேம் சேஞ்சர் ... உருவாக்க நேரம் எடுக்கும் .. வைரஸைத் தடுக்க சளிச்சுரப்பியைச் சுற்றியுள்ள சரியான அளவு தடுப்பூசியாக இருக்கும்."நிர்வகிக்க இது மிகவும் வசதியானது என்று நாங்கள் நம்புகிறோம், நீங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதையும் நாசி தடுப்பூசி தடுக்கும்" இவ்வாறு கூறினார்.

English summary
Existing production capacity to manufacture Covishield, one of the two Covid vaccines being administered in India is "very stressed, to put it frankly", Serum Institute of India (SII) CEO Adar Poonawalla told NDTV on Tuesday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X