அதிமுக பொதுக்குழு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் மேல்முறையீடு.. மீண்டும் பரபரப்பு
டெல்லி: அதிமுக பொதுக்குழு செல்லும், பொதுக்குழு தீர்மானத்தில் தலையிட முடியாது என ஆகஸ்ட் 25ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அதிமுக விவகாரத்தில் பரபரப்பு தொற்றி உள்ளது.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து களேபரங்களுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூடிய நிலையில் கட்சியில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். மாறாக அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். இதில் தொடர்ந்து ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. தீர்ப்புகள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே வந்தது.
இதனால் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளரா எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரம் வருமாறு:
அதாவது கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடைக்கோரி ஓ பன்னீர் செல்வம் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த மார்ச் 28 ம் தேதி நீதிமன்றம் நிராகரித்தது. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்திருந்தது.
இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டார். இதனை எதிர்த்த மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு விசாரித்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லும், தீர்மானத்தில் தலையிட முடியாது எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டன. இது கடந்த ஆகஸ்ட் 25ல் நடந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக தான் உச்சநீதிமன்றத்தில் தற்போது ஓ பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். அனைத்து அம்சங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்யவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications