டெல்லியில் யாரை வணங்கியிருக்கார் பாருங்க ஓபிஎஸ்.. ‘பிள்ளையார்’ பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையா..!?
டெல்லி : அதிமுகவில் நிலவி வரும் பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற வளாகத்தில் குரங்கு ஒன்றை கைகூப்பி வணங்கியுள்ளார்.
Recommended Video
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.
நாடாளுமன்ற வளாகத்தில் குரங்குகள் திரிந்ததைப் பார்த்த ஓ.பி.எஸ், ஒரு குரங்கைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பொதுக்குழு மோதல்
பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாகவே நடைபெற்றது. பொதுக்குழு பாதியில் கலைந்து, மீண்டும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்த நிலையில், அதிமுகவில் பரபரப்பு நீடித்தது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரு தரப்பினருமே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

டெல்லி கிளம்பிய ஓபிஎஸ்
அப்போது, பா.ஜ.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தனித்தனியாகச் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரவு தர வேண்டினர். மேலும், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது டெல்லி வரவும் வேண்டுகோள் விடுத்தனர். பொதுக்குழு குழப்பங்களுக்கு மத்தியில் அன்று இரவே டெல்லி கிளம்பினார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷணன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர்.

நாடாளுமன்றத்தில்
டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வின்போது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் பேச ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், பிரதமர் மோடி நேரம் ஒதுக்காததால் இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கொள்ளவில்லை.

குரங்குக்கு வணக்கம்
இந்நிலையில், இன்று மாலை சென்னை திரும்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிப் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்த குரங்கைக் கையெடுத்துக் கும்பிட்டு வணங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications