என்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு!
சென்னை: டெல்லியில் பாஜக கூட்டணிக்கட்சி எம்பிக்களுடன் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி முறைப்படி பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார். இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி சென்றனர்.
இதைத்தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அன்றைய நாளில் அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக அவர்கள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று டெல்லி சென்றுள்ள அவர்கள் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதைத்தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications