Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குர்ஆன்லயே இருக்கு.. இஸ்லாத்தில் “ஹிஜாப்” கட்டாயம்! வழக்கறிஞர் வாதம் - பாராட்டிய உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை என்று கூறி கர்நாடக உயர்நீதிமன்றம் அரசின் ஹிஜாப் தடை தொடரும் என்று தீர்ப்பளித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் குர்ஆன் மற்றும் ஹதீஸ் எனப்படும் முஹம்மது நபியின் வழிமுறை மற்றும் வடிகாட்டல்களில் ஹிஜாப் கட்டாயம் என்று சொல்லப்பட்டதற்கான ஆதாரத்தை காட்டினார்.

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. 3 நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கு செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குர்ஆன் ஆதாரம்

குர்ஆன் ஆதாரம்

இன்று நாள் விசாரணையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது வழக்கறிஞர் பாஷா, "கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை என்று" முஹம்மது கூறியதாக குறிப்பிட்டு உள்ளது. ஆனால் குர்ஆனில் ஹிஜாப் பற்றி இடம்பெற்று உள்ளது." என்று கூற அந்த வரிகளை நீதிபதி சுட்டிக்காட்ட சொன்னார். சில குர்ஆன் வசனங்களின் எண்களை குறிப்பிட்ட பாஷா, "குர்ஆனில் ஹிஜாப் 'கிமர்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கிமர் என்றால் தலையை முழுமையாக மறைத்தல் என்று ஆக்ஸ்போர்டு டிக்சனரியில் பொருள் உள்ளது." என்று கூறினார்.

இஸ்லாத்தின் கடமைகள்

இஸ்லாத்தின் கடமைகள்

அதன் பின்னர் இஸ்லாத்தின் 5 கடமைகள் குறித்து நீதிபதிகள் விளக்கம் கேட்க வழக்கறிஞர் பாஷா விளக்கம் கொடுத்தார். அதன் பின்னர் நபிகள் நாயகம் வாழ்வில் நடந்த சம்பங்களை மேற்கோள் காட்டிய பாஷா, "உயர்நீதிமன்றம் ஹிஜாபை திரை என்று குறிப்பிடுகிறது." என்று சொல்ல, நீதிபதி குப்தாவோ, "நீங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸை வாசிக்கிறீர்கள் நாங்கள் என்ன செய்வது? என்று கேட்க குர்ஆனில் 114 அத்தியாயங்கள் உள்ளதாக பாஷா தெரிவித்தார்.

வழக்கறிஞருக்கு பாராட்டு

வழக்கறிஞருக்கு பாராட்டு

அப்போது நீதிபதி குப்தா, "மன்னிக்கவும். நான் என்னுடைய அறியாமையை காட்டுகிறேன். நீங்கள் ஹிஜாபுக்கு தற்காலிக தண்டனை இல்லை என்கிறீர்கள். தொழுகை, ஜக்காத்துக்கும் இடைக்கால தண்டனை இல்லையா..? ஹிஜாப் அவற்றுக்கு கீழே இருந்தால் அது எப்படி கட்டாயமாகும்." என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர் பாஷா, "இவை இறைவனின் வார்த்தைகள். அவற்றை நம்புகிறார்கள்." என்று தெரிவிக்க., உங்கள் வாதத்தை சரியாக முன்வைத்தீர்கள் என்று நீதிபதி குப்தா பாராட்டு தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+