"ஜி20இல் நிரந்தர இடம்.." பிரதமர் மோடி சொன்ன அந்த ஒரு வரி.. ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் செம ஹேப்பி
டெல்லி: ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெறும் நிலையில், ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராகப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
ஜி20 உச்சி மாநாடு இந்தாண்டு தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் பைடன் தொடங்கி உலகின் டாப் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் முதல்முறையாக ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆகிறது. இதற்காக ஆப்பிரிக்க ஒன்றியம் சார்பில் பிரதிநிதி இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இது ஆப்பிரிக்க வளர்ச்சியை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்
இதில் பிரதமர் மோடி தனது பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதாகத் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இதில் பிரதமர் மோடி பேசுகையில், "இன்று, ஜி 20 தலைவர் என்ற முறையில், சர்வதேச அளவில் இருக்கும் நம்பகத்தன்மையற்ற நிலையை மாற்றவும் உலகை ஒன்றிணைக்கவும் இந்தியா அழைப்பு விடுக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செல்ல வேண்டிய நேரம் இது. உணவு மற்றும் எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை, இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், நீர் பாதுகாப்பு என்று அனைத்திலும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்த ஜி20 மாநாட்டில் இணைந்துள்ளனர். இந்த ஜி20 மாநாட்டிற்காக நாட்டின் 60க்கும் மேற்பட்ட நகரங்களில், 200 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன
வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.. இதன் காரணமாகவே ஆப்ரிக்க யூனியனுக்கு ஜி20யில் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதை இந்தியா முன்மொழிந்தது. இந்தியாவின் இந்த முன்மொழிவுக்கு அனைத்து நாடுகளும் நிச்சயம் ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications