இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்த கொரோனா.. 3 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு.. திணறும் 2 மாநிலங்கள்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதத்திற்கு கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 233 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மார்ச் மாதத்திற்கு பின் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என்ன?
இந்தியாவில் திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வதற்கு மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் பாதிப்பு அதிகமானதே காரணமாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மும்பையில் மட்டும் ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 80% கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. கேரளா மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 7 பேர் பலி
நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 7 பேர் உயிரிழந்தனர். அதில் கேரளாவில் 5 பேரும், உத்தரப் பிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லியில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் என்ணிக்கை 5,24, 715ஆக உயர்ந்துள்ளது.

நடவடிக்கை
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது குறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை கண்காணித்து வருகிறோம். இதனால் கொரோனா சோதனைகளை அதிகரித்த உத்தரவிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

தடுப்பூசி கணக்கு என்ன?
நாடு முழுவதும் நேற்று மட்டும் 14,94,086 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 194 கோடியே 43 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், நேற்று ஒரு நாளில் 3,13,361 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications