60 மணி நேரம்.. பிபிசி அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்ட ஊழியர்கள்! முடிவுக்கு வந்த ஐடி ஆய்வு!
3 நாட்களாக பிபிசி அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ஆய்வு நிறைவடைந்துள்ளது.
டெல்லி: கடந்த 3 நாட்களாக டெல்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலகங்களில் வருமானத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வு இரவு 11 மணியளவில் முடிவுக்கு வந்திருக்கிறது. சுமார் 60 மணி நேரமாக தொடர்ந்த வருமான வரித்துறையினர் ஆய்வின் போது, பிபிசி ஊழியர்கள் பலரும் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து நடந்த கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி ஊடகம் India: The Modi Question எனும் ஆவணப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டது. இந்த படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்தது. இது பிரதமர் மோடியின் புகழை மழுங்கடிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்பிகள் பலரும் கூறினர்.

மத்திய அரசு தடை
இதனையடுத்து இப்படத்தை தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ன் கீழ் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் போன்ற தளங்களில் இப்படம் நீக்கப்பட்டது. ஆனால் இந்நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கேரளா தொடங்கி டெல்லி வரை இந்த ஆவணப்படம் பல்வேறு பகுதிகளில் திரையைிடப்பட்டது.

பிபிசி ஆவணப்படம்
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் இப்படம் திரையிடப்பட்டபோது இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், வலதுசாரி அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதேபோல ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இப்படத்தை திரையிட முயன்றதால் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நாடு முழுவதும் கண்டன குரல்கள் வலுத்தன. கேரளாவில் கல்வி நிலையங்கள் தாண்டி பொது இடங்களிலும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இப்படத்தை திரையிட்டன.

60 மணி நேரம் ஆய்வு
இந்த நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். இதற்கு முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் தொடங்கிய வருமான வரித்துறையின் ஆய்வு, மூன்று நாட்களாக தொடங்கியது. கிட்டத்தட்ட சுமார் 60 மணி நேரம் ஆய்வு தொடர்ந்தது.

அலுவலகத்திலேயே இருந்த ஊழியர்கள்
இந்த நிலையில் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு நேற்று இரவு 11 மணியளவில் நிறைவடைந்துள்ளது. இந்த ஆய்வின் போது ஊழியர்களில் 10 பேர் அலுவலகத்திலேயே இருந்துள்ளனர். தங்கள் ஊழியரின் செல்போன் உட்பட அனைத்து மின்னணு பொருட்களையும் ஆய்வு நடத்தியவர்கள் கேட்கும்போது திறந்து காட்ட வேண்டும் என்று பிபிசி உத்தரவிட்டிருந்தது. அதற்கேற்ப ஊழியர்கள் ஒத்துழைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

பிபிசி விளக்கம்
இதுகுறித்து பிபிசி ஊடகம் சார்பில் கூறுகையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த விவகாரம் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications