டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடுகதையா இந்த வாழ்க்கை... அத்வானியை தொடர்ந்து ஜோஷியையும் கழட்டிவிட்ட மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    அத்வானியை தொடர்ந்து ஜோஷியையும் கழட்டிவிட்ட மோடி, அமித்ஷா கூட்டணி- வீடியோ

    டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி வரிசையில், முரளி மனோகர் ஜோஷிக்கும் மக்களவை தேர்தலில் சீட் கொடுக்கமால் பாஜக தலைமை கழட்டிவிட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எல்.கே.அத்வானியை பாஜக தலைமை கேட்டுக்கொண்டதால் அவர் போட்டியிடவில்லை. இந்த வரிசையில் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியையும் போட்டியிட வேண்டாம் பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

    பாஜகவின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய பெருந்தலைகளின் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்ததாகவே தெரிகிறது,

    1 மணி நேரம்தான்.. வேகம்.. கவனமாக இருங்கள்.. வேட்பாளர்களுக்கு டிடிவி தினகரன் அனுப்பிய மெசேஜ்! 1 மணி நேரம்தான்.. வேகம்.. கவனமாக இருங்கள்.. வேட்பாளர்களுக்கு டிடிவி தினகரன் அனுப்பிய மெசேஜ்!

    பறிக்கப்பட்ட காந்திநகர்

    பறிக்கப்பட்ட காந்திநகர்

    குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வென்றவர் எல்.கே.அத்வானி. இந்த முறை அத்வானியிடம் இருந்து காந்தி நகர் தொகுதியை பாஜக தேர்தல் குழு தலைவர் அமித்ஷா பறித்துக் கொண்டார், அவரே அங்கு போட்டியிடுகிறார்.

    கான்பூர் பறிப்பு

    கான்பூர் பறிப்பு

    பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கடந்த முறை போட்டியிட்டு வென்ற கான்பூர் தொகுதிக்கு அவரை வேட்பாளராக பாஜக தலைமை அறிவிக்கவில்லை. அதேநேரம் பாஜக பொதுச்செயலாளர் ராம்லாலின் கோரிக்கையை ஏற்று கான்பூர் உள்பட எந்த தொகுதியிலும் நான் போட்டியிடவில்லை என்ற முரளி மனோகர் ஜோஷியின் மெசேஜ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பேச்சாளர்கள் பட்டியல்

    பேச்சாளர்கள் பட்டியல்

    சரி தேர்தலில் தான் போட்டியில்லை என்று பார்த்தால் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலும் அத்வானி (91), முரளி மனோகர் ஜோஷி (85) ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், உமா பாராதி ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

    தேர்தலில் போட்டியில்லை

    தேர்தலில் போட்டியில்லை

    இந்த தேர்தலில் சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, ஆகியோர் போட்டியிடவில்லை. இதேபோல் பிஎஸ் கந்தூரி, பிஎஸ் கோஸியாரி, கரியா முண்டே ஆகியோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை.

    அதிரடி முடிவு

    அதிரடி முடிவு

    வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்பே பாஜக மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டார். இதேபோல் இமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் சாந்தா குமார் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

    மோடி அதிர்ச்சி

    மோடி அதிர்ச்சி

    முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 2014-15ம் ஆண்டு 2.6 சதவீதமாக இருந்த பாதுகாப்புதுறை செலவீனங்களுக்கான ஜிடிபி, 2017-18ம் ஆண்டில் 1.56 சதவீதமாக சரிந்து விட்டது என்றும், 1962ம் ஆண்டு சீனாவுடனான போர் சமயத்தில் இருந்த நிலைக்கு சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இதனால் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    முரளிக்கு கல்தா

    முரளிக்கு கல்தா

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, இது தொடர்பான செய்தி லிங்கையும், கான்பூரில் போட்டியிடப் போவதில்லை என்ற முரளி மனோகர் ஜோஷியின் அறிவிப்பு படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதில் பாதுகாப்புதுறை செலவீனங்களுக்கான ஜிபிடிபி அறிக்கையால் முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் மோடிகிடப்பில் போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஜோஷி மௌனம்

    ஜோஷி மௌனம்

    எதிர்க்கட்சிகள் அனைத்துமே பாஜக தற்போது முழுமையாக மோடியை முன்னிறுத்தியே செல்வதாக குற்றம்சாட்டியுள்ளன. அத்வானி, ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் கூறிவருகின்றன. இந்நிலையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுமாறு அத்வானி, ஜோஷி இருரையும் பாஜக தலைமை கட்டாயப்படுத்தும் நிலையில், அவர்கள் இருவருமே இதுவரை வாய் திறக்காமல் மௌமாக இருக்கிறார்கள்.

    English summary
    After Advani, Murli Manohar Joshi asked not to contest in the 2019 Lok Sabha polls
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X