கேபினட் மாற்றம் ஓவர்... அதிருப்தியாளர்களுக்கு காத்திருக்கும் கட்சி பதவிகள்- பாஜக அடுத்த அதிரடி!
டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றம் முடிவடைந்த நிலையில் பா.ஜ.க.வின் தேசிய கட்டமைப்பை மாற்றும் நடவடிக்கைகள் தொடங்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது 12 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 பேர் கேபினட் அமைச்சர்களாக்கப்பட்டனர். 36 பேர் புதுமுகங்களும் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள்.

பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம்
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது அதிருப்தி குரல்களும் பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் அடுத்த ஆண்டு மாநில சட்டசபை தேர்தல்கள், அதிருப்தி குரல்கள் இவற்றை சரி செய்யும் விதமாக புதிய தேசிய அளவிலான நிர்வாகிகள் நியமனத்தை பாஜக மேற்கொள்ள உள்ளதாம்.

கைலாஷ் விஜயவர்ஜியா மாற்றம்?
மேற்கு வங்க பாஜகவின் பொறுப்பாளராக தற்போது கைலாஷ் விஜயவர்ஜியா இருந்து வருகிறார். அவர் விடுவிக்கப்பட்டு வேறு ஒரு மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட இருக்கிறாராம்.

திலீப் கோஷ்க்கு புதிய பதவி
மேற்கு வங்க மாநில பாஜக பொறுப்பாளர் பதவிக்கு திலீப் கோஷ் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாம். மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரியுடன் இணைந்து பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை திலீப் கோஷ் மேற்கொள்வார் என கூறப்படுகிறது. அதேபோல் மேற்கு வங்க மாநில பாஜக பொதுச்செயலாளர்களும் மாற்றப்பட இருக்கின்றனர்.

முண்டே சகோதரிகளுக்கு வாய்ப்பு
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்தி குரலை வெளிப்படுத்தியவர் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பங்கஜா முண்டே. அவரது சகோதரியும் பாஜக எம்பியுமான பிரீதம் முண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அப்படி நடக்காமல் போனதால் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இதனை சரி செய்யும் வகையிலும் மாற்றங்கள் இருக்கலாமாம்.

தமிழக சீனியர்களுக்கும் பொறுப்பு?
தமிழகத்தைச் சேர்ந்த சில சீனியர் பாஜக தலைவர்களுக்கு தேசிய அளவிலான பதவிகள் கிடைக்கக் கூடுமாம். தேசிய செயலாளர்கள் அல்லது மாநில பொறுப்பாளர்கள் பதவிகள் ஒன்றிரண்டு தமிழக சீனியர் பாஜக தலைவர்களுக்கு காத்திருக்கின்றன என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications