மோடி பக்கத்து சீட்லதான் உட்காருவேன் ஆமா.. அடம் பிடித்தாராம் தென்னாப்பிரிக்கா அதிபர்.. ஏன்?
டெல்லி: சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று இருந்தார். இதன்பிறகு, தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா பிரதமர் மோடி அருகே அமர விரும்பி அடம்பிடித்த சம்பவம் நடந்ததாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 3 வல்லரசு நாடுகள் மட்டுமே கால்பதித்து இருந்தன. இந்த வரிசையில் தற்போது 4வது நாடாக இந்தியா சந்திரயான் 3 திட்டம் மூலம் நிலவில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.

மேலும் இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. அதாவது சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 23ம் தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் சாப்ட் லேண்டிங் முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான் 2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய நிலையில் இந்த முறை இஸ்ரோ விஞ்ஞானிகள் திறம்பட செயல்பட்டு சாதனை படைத்தனர். தற்போது நிலவில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் பல்வேறு ஆய்வுகளை அசத்தலாக மேற்கொண்டு வருகிறது. நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், சல்பர், குரோமியம், டைட்டேயம் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது.
முன்னதாக நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் இருந்தார். ஜேகனஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று இருந்தார். இதனால் அவரால் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. மாறாக அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதை பார்த்து விஞ்ஞானிகளை பாராட்டினார். மேலும் நாட்டு மக்களுக்குமு் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதன்பிறகு தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளின் சுற்றுப்பயணத்தை நேற்று முடித்த பிரதமர் மோடி கடந்த 26ம் தேதி நேரடியாக பெங்களூர் வந்து இறங்கினார். இதையடுத்து பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு பிரதமர் மோடி சென்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்பட சந்திரயான் 3 திட்டத்தின் விஞ்ஞானிகளை சந்தித்து நேரில் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் தான் சந்திரயான் - 3 வெற்றிக்கு பிறகு தென்ஆப்பிரிக்காவில் நடந்த சுவாரசிய சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கி உள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சந்திரயான் 3 குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: கடந்த வாரம் தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் பிரிக்ஸ் மாநாடு நடந்தது. பிரதமர் மோடியுடன் நான் பங்கேற்றேன். அப்போது தான் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து உலக நாடுகளும், அதன் விண்வெளி ஆய்வு ஏஜென்சிகளும் அரசை பாராட்டியது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் நேரடியாக வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக கூற வேண்டும் என்றால் தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமாபோசா தனது நாட்டுக்கான வெற்றி என்றே கூறினார். மேலும் பிரதமர் மோடியின் அருகே அமர விரும்புவதாகவும், மோடியின் அருகே அமர்வது எனக்கும் அவரது ஆற்றலை தரும் என நம்புவதாக தெரிவித்தார். இப்படி சந்திரயான் 3 திட்டம் ஒவ்வொரு விஷயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்பிறகு பிரதமர் மோடி சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவின் நிலவு ஆய்வு பயணத்துக்கு நண்பர் ரமபோசா நிறைய பாராட்டுகளை வழங்கியுள்ளார். இந்த வெற்றி ஒரு நாட்டுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட வெற்றியாக இல்லாமல் மனித குலத்துக்கான வெற்றியாக ஏற்றுக்கொள்ளப்படுவது தான் எங்களுக்கு பெருமையாக இருக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
மேலும் இன்னொரு விஷயமும் எனது நினைவில் உள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் யூ வடிவ மேஜையில் 100 முதல் 150க்கும் அதிகமானவர்கள் அமர்ந்து இருந்தோம். சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது அனைவரும் இயல்பாகவே எழுந்து நின்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதன்மூலம் சந்திரயான்-3 என்பது இந்தியாவின் சாதனை என்பது மட்டுமின்றி உலகத்துக்கான சாதனை என்பதை நாம் உணரலாம்'' என்றார்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications