யுஜிசி வரைவு விதிகளுக்கு மத்திய பாஜக அரசுக்கு ஆதரவு தரும் நிதிஷ்குமாரின் ஜேடியூ கடும் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: துணைவேந்தர்களை ஆளுநர்களே நியமிப்பது உள்ளிட்டவைகளுடன் கூடிய புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் சட்டசபைகளில் யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கூட்டணிக் கட்சியான ஜேடியூவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் உள்ள பல்கலைக் கழக மானியக் குழுவான யுஜிசி அண்மையில் புதிய வரைவு விதிகளை வெளியிட்டது. இந்த வரைவு விதிகளுக்கு மிகக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் யுஜிசி வரைவு விதிகள் இருக்கின்றன என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

ugc jdu bjp


உதாரணமாக துணைவேந்தர்கள் தேடுதல் குழுவில் இதுவரை மாநில அரசின் பிரதிநிதி இடம் பெற்றிருந்தார்; ஆனால் தற்போது பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநரே நியமிப்பார்; மாநில அரசின் பிரதிநிதிக்கு இந்த குழுவில் இடம் கிடையாது; அதுவும் கல்வித்துறை சாராத யாரை வேண்டுமானாலும் துணைவேந்தர்களாக ஆளுநர்கள் நியமிக்க முடியும் என்கிறது புதிய யுஜிசி வரைவு விதி. இதேபோல பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு முதலில் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.

இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.,ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனையேற்று கேரளா சட்டசபையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனால் யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் (ஜேடியூ) யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜேடியூ கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறுகையில், துணைவேந்தர்களை ஆளுநர்களே நியமனம் செய்வதால் மாநிலங்களின் உயர் கல்வித்துறை கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+