தேசியக்கொடியுடன் நேரு.. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்ற ராகுல்! டுவிட்டரில் நடந்த மாற்றம்!
டெல்லி: இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களின் டுவிட்டர் கணக்குகளின் புரொபைல் படங்களை மாற்றியுள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு விழா ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது ஆண்டு சுதந்திரதினத்தை சிறப்பாக ஒரு ஆண்டு வரை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இதன் தொடர்நச்சியாக 75வது சுதந்திர தினமானது இந்தியாவில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் தேசியக்கொடி
இந்நிலையில் தான் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதாவது 75 வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

டிபியை மாற்றிய மோடி
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‛மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 வரை மக்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களின் முகப்பு பக்கத்தில் தேசியக் கொடியை வைக்கும்படி கேட்டு கொண்டார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் தேசியகொடியை புரொபைல் படமாக நேற்று மாற்றினார்.

அமித்ஷா-ஜேபி நட்டா மாற்றம்
இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் தங்கள் புரொபைல் படமாக தேசியக் கொடியை வைத்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றி வருகின்றனர்.

நேருவின் படத்தை வைத்த ராகுல்காந்தி
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். அதில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக்கொடியை ஏந்திருக்கும் படத்தை அவர் தனது புரொபைல் படமாக மாற்றியுள்ளார். இதில் ஜவஹர்லால் நேருவின் படம் பிளாக் அன்ட் வெயிட் வகையில் உள்ளது. மேலும் புரொபைல் படம் மாற்றம் குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "தேசியக்கொடி (மூவர்ணக் கொடி) நாட்டின் பெருமை. அது ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தியும் மாற்றினார்
இதேபோல் ராகுல்காந்தியின் சகோதரரான பிரியங்கா காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். இவரும் தேசியக்கொடியை ஜவஹர்லால் நேரு கையில் ஏந்தியிருக்கும் படத்தை புரொபைல் படமாக மாற்றியுள்ளார். அதில், ‛‛நமது பிரியமான தேசியக்கொடி நம் வெற்றிகரமான நாட்டின் அடையாளம். நமது கொடி உயர பறக்கட்டும்'' என கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications