டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாக்., பிடியில் சிக்கிய அபிநந்தனுக்கு என்ன நடந்திருக்கும்… விமானி நச்சிகேதா பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    அபிநந்தனுக்கு என்ன நடந்திருக்கும் - விமானி நச்சிகேதா பதில்- வீடியோ

    டெல்லி: இன்று நாடு திரும்ப உள்ள விங் கமாண்டர் அபிநந்தனை விசாரித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும் என விமானி நச்சிகேதா பதிலளித்துள்ளார்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக பாகிஸ்தான் வசம் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விமானி அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

    அதுமட்டும் ரகசியம்.. ராணுவ கான்வாய்.. பாதுகாப்பு.. இப்படித்தான் வாகா அழைத்து வரப்படுகிறார் அபிநந்தன் அதுமட்டும் ரகசியம்.. ராணுவ கான்வாய்.. பாதுகாப்பு.. இப்படித்தான் வாகா அழைத்து வரப்படுகிறார் அபிநந்தன்

    உண்மை தெரியவரும்

    உண்மை தெரியவரும்

    இதனிடையே, கார்கில் போரின் போது பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானி நச்சிகேதா கூறியிருப்பதாவது: விமானி அபிநந்தன் நாடு திரும்பியதும் அவரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

    விமானிக்கு ஊக்கம்

    விமானிக்கு ஊக்கம்

    எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் எந்த உண்மையையும் பாகிஸ்தான் வசம் தெரிவித்து இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் இந்தியப் படையில் அளிக்கப்பட்டுள்ள பயிற்சி அவருக்கு ஊக்கத்தை அளித்து இருக்கும் எனவும் தெரிவித்தார்

    நம்புகிறேன்

    நம்புகிறேன்

    ஜெனிவா ஒப்பந்தபடி சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள் மரியாதையாக நடத்தப்பட்டு, பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இது நடந்து இருக்கும் என தான் நம்புவதாக கூறினார்.

    வீரம், விவேகம்

    வீரம், விவேகம்

    அபிநந்தன் வீரமும், விவேகமும் உள்ள வீரர். ஒரு விமானப்படை வீரருக்கான பண்பும் பண்பாடும் அவரிடம் உள்ளது. நாம் அவரை நினைத்து பெருமைப் பட வேண்டும் அவர் இந்திய மண்ணில் காலடி வைத்து மீண்டும் திரும்ப, நாடே காத்திருக்கிறது என்று தெரிவித்தார். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வசம் சிக்கிய விமான நசிகேதா இந்திய அரசின் நடவடிக்கையால் எட்டு நாட்களுக்கு பிறகு நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கையில் பேப்பர்

    கையில் பேப்பர்

    முன்னதாக, பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்த விமானி அபிநந்தன் தனது கையிலிருந்த பேப்பர்களை கிழித்து வாயில் போட்டு மென்று துப்பினார் என கூறப்படுகிறது.

    முழு மருத்துவ பரிசோதனை

    முழு மருத்துவ பரிசோதனை

    அதேநேரம், பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் கேட்ட முக்கிய கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல், அபிநந்தன் வீரமாகவும் விவேகமாகவும் அந்த இடத்தில் செயல்பட்டது, இந்தியர்கள் அனைவரையும் பெருமை பட வைப்பதாக அமைந்தது. இருப்பினும், இந்தியா வசம் விமானி அபிநந்தன் ஒப்படைக்கப்பட்ட பின்பு ராணுவத்தின் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு என்ன நடந்தது என்பது உறுதியாகத் தெரியும் என கூறப்படுகிறது.

    English summary
    Pilot Kambampati Nachiketa Said That After the medical examinatione truth will come
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X