ED சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்படுவது ஏன்? மோடி கேள்வி
டெல்லி: அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்படுவது ஏன்? என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

400 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்: வளர்ச்சி திட்டங்களுக்கே பாஜக அரசு முன்னுரிமை அளிக்கும். ஏழைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது அடுத்த 1000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அஸ்திவாரம் இடும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் கட்டாயம் வெற்றி பெறும். இதில் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
மத்திய பாஜக அரசு பெரிய குறிக்கோளுடன் மிகக் கடுமையாக உழைக்கின்றது. பாஜக ஆட்சியில் கிராமப்புற மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 4.8 கோடி வீடுகள் கட்டி முடிக்க காங்கிரசுக்கு 100 ஆண்டுகள் பிடித்திருக்கும். 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பேசுவது எங்களின் சாதனையை அல்ல.. நாட்டின் சாதனையை தான் பேசுகிறோம்.
மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை: பெண்களுக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது. எல்லா குடும்பத்திலும் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. 3 கோடி பெண்களை பாஜக அரசு லட்சாதிபதிகளாக உருவாக்கியுள்ளது. நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். காங்கிரசின் செயல்பாடுகளால் நாட்டிற்கே இழப்பு. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.
எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. கூட்டணி கட்சிகளின் திறமையை காங்கிரஸ் வீணடிக்கிறது. காங்கிரஸின் செயல்பாடுகளால் நாட்டிற்கே இழப்பு தான். 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். 55 கோடி மக்களின் சுகாதார நலன் பேணப்பட்டு இருக்கிறது. சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க வங்கிக்கடன் திட்டம் அமலாகியுள்ளது.
நம்பிக்கை போய்விட்டது: ஒரு முகத்தை மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்த நினைப்பதால் இழுத்து மூடும் நிலை உள்ளது. காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றி முடிக்க 3 தலைமுறைகள் தேவைப்படும். காங்கிரஸ் கட்சியின் மந்தமான ஊர்ந்து ஊர்ந்து செல்லும் வேகம் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி சிதறிவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கை போய்விட்டது. காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தை நம்பி உள்ளது.
நாட்டின் எல்லைப்பகுதி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பீகாரில் பட்டியில் இன மக்களுக்காக போராடிய காங்கிரஸ் அரசு ஓபிசி தலைவர்களை ஏமாற்றியுள்ளது. தேசிய ஆலோசனைக்குழுவில் காங்கிரஸ் கட்சியில் எத்தனை பேர் ஓபிசி பிரிவினர் இருந்தனர்?
அமலாக்கத்துறை சோதனை: அழிவுப்பாதையை நோக்கி காங்கிரஸ் செல்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா காலத்திலும் கூட விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளோம். விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் 2.80 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்படுவது ஏன்? பாஜக ஆட்சியில் 1 லட்சம் கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆயிரம் கோடி மட்டுமே அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டு இருந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications