முதல் முறையாக இரவு நேரத்தில்..அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை!
டெல்லி: அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நவீன 'அக்னி பிரைம்' ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் தீவிலிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையின் போது ஏவுகணையின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாக செயல்பட்டன.

ஏற்கனவே மூன்று முறை சோதனை அடிப்படையில், செலுத்தப்பட்ட இத்தகையை ஏவுகணைகளின் துல்லியம் மற்றும் செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவை உறுதிசெய்யப்படுவதற்கு ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்குமுன், முதன் முறையாக இந்த இரவுநேரப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் செலுத்துபாதை முழுவதும் பல்வேறு இடங்களில் ராடார், டெலிமெட்ரிக், மின்னணு கண்ணாடி இழை கண்காணிப்பு செயல்முறை போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் தளபதிகள் இந்த வெற்றிகரமான அணுஆயுதம் தாங்கிய ஏவுகணை சோதனையைப் பார்வையிட்டனர்.
அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நவீன 'அக்னி பிரைம்' ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனைக்காகவும், மிக சிறப்பான செயல்பாட்டுக்காகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராணுவத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பரிசோதனைக் கூடங்களின் குழுக்கள் மற்றும் இந்தப் பரிசோதனையில் ஈடுபட்டவர்களின் முயற்சிகளைப் பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பிரிவு செயலாளர் டாக்டர் சமீர் வி காமத் பாராட்டியுள்ளார்.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications