8 நிமிடத்தில் நொறுங்கியது.. ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய அந்த விமானி யார்? வெளியான முக்கிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அங்கே மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்து, விமானம் புறப்பட்ட 8 நிமிடங்களில் நிகழ்ந்தது. விமான விபத்து தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

விபத்துக்குள்ளான விமானம்

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:39 மணிக்கு லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குப் புறப்பட்டது. புறப்பட்ட 8 நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் நிலை விமானி கிளைவ் குந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். இருவருக்கும் சேர்த்து 9,300 மணி நேர விமான அனுபவம் உள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Ahmedabad Air India Plane Crash Who are the pilots What we know about them

விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8,200 மணி நேர விமான அனுபவமும், துணை விமானி கிளைவ் குந்தருக்கு 1,100 மணி நேர விமான அனுபவமும் இருப்பதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் நீண்ட அனுபவம் கொண்டவர்.

விமானம் விபத்திற்கு உள்ளான நேரத்தில் 625 அடியிலிருந்து நிமிடத்திற்கு 475 அடி என்ற வேகத்தில் கீழே இறங்கி.. அதன்பின் விழுந்தது போது, விமானிகள் செயல்பட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே இருந்தது. விமானம் தரையிறங்கியதும் வெடித்து சிதறியது. இந்த விபத்து அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடந்தது. சபர்வால் நீண்ட அனுபவம் கொண்டவர்

சபர்வால் நீண்ட அனுபவம் கொண்டவர்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி பெரும் சேதம் அடைந்துள்ளது. விடுதி அறையில் தங்கியிருந்த பல மருத்துவ மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு (ATC) ஒரு MAYDAY அழைப்பு வந்தது. ஆனால், மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று ATC தெரிவித்துள்ளது.

இதுகுறித்து DGCA வெளியிட்ட அறிக்கையில், "ATC தகவலின்படி, விமானம் அகமதாபாத்தில் இருந்து 1339 IST (0809 UTC) மணிக்கு ஓடுபாதை 23-ல் இருந்து புறப்பட்டது. ATC-க்கு MAYDAY அழைப்பை விடுத்தது. ஆனால் அதன் பிறகு விமானத்திலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஓடுபாதை 23-ல் இருந்து புறப்பட்ட உடனேயே, விமான நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதிக்கு வெளியே தரையில் விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 787-8 டிரீம்லைனர் ரக விமானமான இதில், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். விபத்து குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், அப்பகுதியில் இருந்து வெளியான காட்சிகளில் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது. விபத்துக்கு உள்ளான விமானம் ஏர் இந்தியா 171 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்கு மதியம் 1:10 மணிக்கு செல்லக்கூடிய விமானமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+