குஜராத்தில் ஷாக்.. விமானம் விழுந்து நொறுங்கிய அந்த நொடி! வெளியான அதிர்ச்சி வீடியோ
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 200க்கும் அதிகமான பயணிகள் இருந்த நிலையில், அவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து அச்சம் எழுந்திருக்கிறது. இந்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கும் வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இன்று மதியம் 1.30 மணிக்கு, 230 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மேலே எழும்ப முடியாமல் தினறியது. இதனால், அருகில் இருந்த மக்கள் குடியிருப்பில் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது.

விமானம் விழுந்த பகுதி மோதானி நகர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் விழுந்தது எப்படி? உள்ளே இருந்த பயணிகளுக்கு என்ன ஆனது? குடியிருப்பில் உள்ள மக்களின் நிலைமை என்ன? என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது சம்பவம் நடந்த பகுதியில் ஆம்புலன்ஸ்கள் சென்றவாறு இருக்கின்றன. விபத்து பகுதியில் எழுந்த புகை மூட்டம் வானம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைக்கும முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்தவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
Watch the live video of the Ahmedabad plane crash!#PlaneCrash #Gujarat #Ahmedabad #viralvideo pic.twitter.com/o9Ql3ijJKE
— Mahesh LLB 🚩 (@mmshiroya74) June 12, 2025
விபத்துக்கு உள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விபத்து குறித்து அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விபத்து குறித்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் விமானம் மேலே எழும்புவதற்கு போராடுவதையும், ஆனால், எழும்ப முடியாமல் கீழே விழுந்து நொறுங்குவதும் தெரிய வந்திருக்கிறது. விழுந்த அடுத்த நொடி, கடுமையான தீ புகை மேலே எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications