ஏழாம் அறிவு உடன் வேலை.. பல லட்சம் சம்பளம்.. 2023 ஆம் ஆண்டின் சிறந்த ஏழு 'ஏஐ' ஜாப்ஸ்
டெல்லி: 2010 இல் இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து எந்திரன் என்ற படத்தை எடுத்திருப்பார். அந்த படத்தில் வந்த பல கற்பனை காட்சிகள் படிப்படியாக உண்மையாகி வருகிறது. இந்த உலகத்தை ஏஐ என்று சொல்லப்படும் எந்திரன் தான் தீர்மானிக்க போகிறான்.எந்திரனுக்கு தேவையான உதவியை செய்யும் வேலையைத்தான் நாம் இனி செய்யப்போகிறோம்.
இதில் என்ன விசேஷம் என்றால், நாம் செய்யும் பல வேலைகளை எந்திரனால் செய்துவிட முடியும். செய்ய முடியாதது என்றால், யோசித்து செயல்படுவது ஒன்று மட்டும் தான்,. ஆனால் அதையும் வருங்காலத்தில் எந்திரன் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அதற்கு சாட் ஜிபிடி தான் சாட்சி.

கடவுள் மனிதனை உருவாக்கினார் என்றால், மனிதனோ தன்னுடைய வேலைகளை செய்ய எந்திரனை உருவாக்கி உள்ளான். இப்போது நாம் அன்றாடம் வேலை செய்யும் பல விஷயங்களில் எந்திரன் நுழைந்துவிட்டான். அவன் தற்போது வரை என்னென்ன செய்கிறான் என்பதை பாருங்கள்.
உங்கள் முகத்தை அடையாளம் காட்டும் வேலை செய்வதும் எந்திரன் தான்.
போக வேண்டிய இடத்திற்கு கூகுள் மேப் வழிகாட்டுகிறதே அதுவும் எந்திரனின் வேலை தான். அதுமட்டுமல்ல செல்போனை தட்டினால், அதில் நீங்கள் ஏதாவது பாட்டு போடு என்று கேட்டால், எந்த பாட்டு என்று கேட்கும், இளையராஜா பாட்டு என்றால் அதை அப்படியே போடும்,காலையில் 7 மணிக்கு அலாரம் வை என்றால் வைத்துவிடும். உங்கள் நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு போன் போடு என்றால், போன் போட்டுவிடும். அதேபோல் நீங்கள் புத்தகம் அல்லது கடிதம் எழுதிக்கொண்டிருந்தால் ஸ்பெல்லிங்கை சரி செய்து தரும். நீங்கள் லீவு லெட்டர் முதல் லவ் லெட்டர் வரை என்ன கடிதம் கேட்டாலும் எழுதி தரும்.
இதெல்லாம் மனிதனின் ஆறாம் அறிவில் உதித்த ஏழாம் அறிவுக்கான சிந்தனையாக பார்க்கப்படுகிறது. சாட் ஜிபிடி வந்த பிறகு உலகமே ஏஐ எனப்படும் எந்திரனை நோக்கி போய்விட்டார்கள். சாப்ட்வேர் கோடிங் எழுதுவது முதல் சாப்பாடு பரிமாறுவது வரை, வீட்டுக்கு டிசைன் போடுவது முதல், வீட்டை கூட்டுவதை வரை எல்லா வேலையையும் எந்திரானால் பார்க்க முடியும். அப்ப நாம் என்ன வேலைக்கு போவது என்று அஞ்சுகிறீர்களா..உங்கள் அச்சம் நியாயமானது தான்.

இதுவரை நமக்கு உதவியாகவே கணினியையும், அதன் அடுத்த தலைமுறையான எந்திரனையும் பயன்படுத்தி வந்தோம்.இனி எந்திரனுக்கு உதவியாளராகவே நாம் வேலை செய்ய முடியும் என்கிற நிலை வரப்போகிறது. ஒரு பக்கம் கற்பனையிலேயே மொத்த உலகத்தையும் படைத்து வரும் மனிதன் , மறுபக்கம் அந்த உலகத்தை படைப்பதற்கு எந்திரனின் உதவியை நாடினான். இப்போது எந்திரன் செய்யபோகும் அந்தவேலைக்கு உதவியாக நாம் மாறப்போகிறோம்.
என்னதான் எந்திரன் வேலை செய்தாலும், அவன் சரியாக செய்கிறானா, அல்லது தவறாக செய்கிறானா என்பதை கண்டுபிடிக்க நிச்சயம் மனிதனால் மட்டுமே முடியும். அதுமட்டுமல்ல, ஐடி துறை, மருத்துவம்,ஓட்டல் துறை, சில்லறை வணிகம், ரீடெய்ல், ஆடடோ மொபைல் என இருக்கும் அத்தனை துறையிலும் எந்திரனின் ஆதிக்கம் தான் இனி இருக்க போகிறது. பலரது வேலையை ஒருவனே செய்யபோகிறான். அவனுக்கு உதவி செய்யும் வேலைக்கும். அவனை எப்படி எல்லாம் வேலை செய்ய வைக்கலாம் என்ற வேலைக்கும் நாம் தான் தேவைப்படுவோம். அப்படிப்பட்ட வேலைகளுக்குத்தான் இனி டிமாண்ட் அதிகமாக இருக்க போகிறது.
சரி அப்படி என்னென்ன ஏஐ வேலைக்கு 2023ம் ஆண்டில் டிமாண்ட் இருக்க போகிறது என்பதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.
1) மெசின் லேனிங் என்ஜினியர் (Machine Learning Engineer)
கல்வித் தகுதி - கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும், டேட்டா புரோகிராமிங், கணிதம் மற்றும் தொடர்புடைய துறையில் நல்ல நிபுணத்துவம் இருக்க வேண்டும்.
வேலைக்கு முதல் முதலாக சேரும் போதே- வருடத்திற்கு ரூ. 3,00,000க்கு மேல் கிடைக்கும்
2) டேட்டா சைன்டிஸ்ட் (Data Scientist)
கல்வித் தகுதி - Data Scientist, கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம். பல ஐடி நிறுவனங்கள் Data Scientist படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கைளையே விரும்புகிறார்கள்.
படித்துவிட்டு உடனே சேர்ந்தாலும், ஆரம்ப சம்பளமே: வருடத்திற்கு 5,00,000 ரூபாய்க்கு மேல்
3) AI Research Scientist
கல்வித் தகுதி - கணினி அறிவியல் , அல்காரிதம்களின் அடிப்படைகள் உங்களுக்கு கண்டிப்பதாக தெரிந்திருக்க வேண்டும்
படித்துவிட்டு உடனே சேர்ந்தாலும், ஆரம்ப நிலை சம்பளம் - 3,25,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.

4) ரோபோடிக்ஸ் பொறியாளர்
கல்வித் தகுதி - கணினி பொறியியல், இயந்திர பொறியியல் அல்லது ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் குறைந்தபட்சம் டிகிரி வாங்கி இருக்க வேண்டும்.
படித்துவிட்டு உடனே சேர்ந்தாலும், ஆரம்ப நிலை சம்பளம் - 3,50,000 ரூபாய்க்கு மேல்
'5) AI Ethicist
கல்வித் தகுதி - AI Ethicist, தத்துவம், கணினி அறிவியல் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலைப் பட்டம் இருந்தால் வேலை உறுதி
படித்துவிட்டு உடனே சேர்ந்தாலும், ஆரம்ப நிலை சம்பளம் - 2,00,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.
6) UX டிசைனர் (UX designer )
கல்வித் தகுதி - தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பொறியியலில் இளங்கலை பட்டம். பல தனியார் கல்லூரிகள் உங்களுக்கு தேவையான திறன்களை வழங்குவதற்கு UX வடிவமைப்பாளர் படிப்பையும் வழங்குகின்றன.
ஆரம்ப நிலை சம்பளம் - 2,60,000 ரூபாய்க்கு மேல்

7) பிசினஸ் இன்டலிஜன்ஸ் டெவலப்பர் (Business Intelligence Developer)
கல்வித் தகுதி - ஐடி, கணினி அறிவியல், மென்பொருள் மேம்பாடு, வணிக நுண்ணறிவு அல்லது கணிதம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம்.
படித்துவிட்டு உடனே சேர்ந்தாலும், ஆரம்ப நிலை சம்பளம் - ரூ 3,40,000 க்கு மேல் தான் இருக்கும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications