"கையில் கிட்டார்! காதில் ப்ளூடூத்!" ராக் ஸ்டாராகவே மாறிய பிரதமர் மோடி! கலக்கும் ஏஐ! வியக்கும் மக்கள்
டெல்லி: இப்போது சாட் ஜிபிடி தொழில்நுட்பம் பெரும் பேசுபொருள் ஆகி வரும் நிலையில், டாப் அரசியல் தலைவர்கள் கலக்கும் சில படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
இந்த காலம் சந்தேகமே இல்லாமல் ஏஐ தொழில்நுட்பத்திற்கு உரியதுதான். பல்வேறு துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தால் வளர்ச்சி வேற லெவலில் சென்று கொண்டு இருக்கிறது என்பதே உண்மை.

அதுவும் இந்த ஏஐ தொழில்நுட்பத்தை சாட் ஜிபிடிக்கு முன், ஜிபிடிக்கு பின் என்று ஈஸியாக பிரிக்கலாம். சாட் ஜிபிடி வருகை என்பது ஏஐ தொழில்நுட்பத்திற்கான ஒரு பென்ச் மார்க்காவே இருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம்: நாம் இதுவரை பாரத்திலேயே சாட் ஜிபிடி தான் வலுவான ஒன்றாக இருக்கிறது. நாம் எந்தவொரு கேள்வியைக் கேட்டாலும் அதற்கான பதிலை சாட் ஜிபிடி டக்கென சொல்லும். அது மட்டுமன்றி கவிதை கேட்டால் கவிதை சொல்லும் அவ்வளவு ஏன் காதல் ரசம் பொங்கப் பொங்க காதல் கடிதத்தையும் கூட எழுதித் தரும் அந்தளவுக்கு மிகவும் வலிமையான ஒன்றாகவே சாட் ஜிபிடி இருக்கவே செய்கிறது. அவ்வளவு ஏன் இது பல கடினமான தேர்வுகளைக் கூட அசால்டாக க்ளியர் செய்கிறது.
இதனிடையே சாட் ஜிபிடி எவ்வளவு வலிமையானது என்பதைக் காட்டும் வகையில் அது உருவாக்கும் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்க்கும் பலரும் இது உண்மையான படங்கள் என்று நினைக்கும் அளவுக்கு இவை தத்ரூபமாக இருக்கிறது. அப்படி அது உருவாக்கிய படங்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இந்த படங்களில் உலகின் டாப் தலைவர்கள் அனைவரும் "ராக்ஸ்டார்களாக" இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி: இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் ராக் ஸ்டார்களாக இருப்பது போன்ற படங்களை ஏஐ தொழில்நுட்பத்துடன் ஜியோ ஜான் முல்லூர் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இது குறித்து அழர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "உலகின் டாப் தலைவர்கள் இன்னொரு உலகில் ராக் ஸ்டார்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த படங்கள் தான் இவை. உலகின் டாப் தலைவர்கள் இசைக்கச்சேரிகளில் வேற லெவல் செய்யும் அசாதாரண நிகழ்வின் படங்கள்" என்று கூறி அவர் இதைப் பதிவிட்டுள்ளார். மேலும், இது போல நிச்சயம் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

கலக்கும் படங்கள்: மின்ஜர்னி என்ற ஏஐ கருவியை வைத்துத் தான் அவர் இந்த படங்களை உருவாக்கியுள்ளார். இதில் பிரதமர் மோடி மட்டுமின்றி முன்னாள் அமெரிக்க அதிபர்களான ஒபாமா, டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங், முன்னாள் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரும் ராக் ஸ்டார்களாக மாறி கலக்குகிறார்கள். இந்தப் படங்கள் இணையத்தில் வெளியான உடனேயே டிரெண்டானது. இதற்குப் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இவை ஏஐ படங்கள் தான் எனத் தெளிவாகத் தெரிந்தாலும் கூட இவை பார்க்க அப்படியே உண்மையான படங்களைப் போலவே இருப்பதாகப் பலரும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் இதில் உலகம் இப்படியே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கும் இதுபோன்ற படங்கள் இணையத்தில் அடிக்கடி டிரெண்டாகிறது. சமீபத்தில் கூட உலகின் டாப் பணக்காரர்கள் அனைவரும் குடிசை பகுதிகளில் இருப்பது போன்ற படங்களும் இணையத்தில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications