செப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்
டெல்லி: இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல் அலை வந்து இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளை இந்தியா சந்தித்தது. தற்போது டெல்டா + வைரஸும் பரவி வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவின் 3ஆவது அலை அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தொடங்கும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளார்கள். முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதன் பிறகு 18 முதல் 45 வயதுக்குள்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன.

3ஆவது அலை
இந்த நிலையில் முதல் அலையில் பெரியவர்கள், இரண்டாவது அலையில் நடுத்தர வயதினர் அதிகம் தாக்கப்பட்டதால் 3ஆவது அலையில் குழந்தைகளை தாக்கக் கூடும் என்ற உறுதிப்படுத்தப்படாத கணிப்புகள் உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான மருத்துவ சோதனைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

தடுப்பூசி
இந்திய மக்கள் தொகையில் இதுவரை 6 சதவீத மக்களே தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த ஆண்டுக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில் சைடூஸ் தடுப்பூசி சோதனையை முடித்துக் கொண்டு அவசர ஒப்புதலுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் குழந்தைகளுக்கான மருத்துவ சோதனைகளை முடித்துவிடும்.

பைசர் தடுப்பூசி
பைசர் தடுப்பூசி ஏற்கெனவே அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊசி 12 முதல் 15 வயது சிறுவர்களுக்கு செலுத்தலாம். எனவே வரும் செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும்.

பாதுகாப்பானது
பைசர் தடுப்பூசியை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான். ஆனால் அமெரிக்காவின் தயாரிப்பான அந்த ஊசி நமக்கு எத்தனை கிடைக்கும் என தெரியவில்லை. அதனால் நம் நாட்டு தடுப்பூசிகள் மூலமும் குழந்தைகளுக்கு செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செப்டம்பர் மாதம் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசி நமக்கு கிடைக்கும் என்றார் குலேரியா.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications