மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? திமுக எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில்
டெல்லி: மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் கட்டப்படும் என கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. ஏறத்தாழ 7 ஆன பின்னரும் கூட இன்னும் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை. இந்நிலையில், எப்போது மருத்துவமனை முழுமையாக கட்டி முடிக்கப்படும்? என்று திமுக எம்பி அருண் நேரு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், "மதுரை எய்ம்ஸ் திட்டம் பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான மொத்த செலவு ரூ. 2021.51 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையுடன் கடன் ஒப்பந்தத்தின் கீழ் திட்ட நிதி பெறப்பட்டு வருகிறது. திட்டத்திற்கு இதுவரை ரூ.421.02 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, திட்டத்தின் பணிகளை 42 சதவீதம் அளவுக்கு நிறைவு செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திட்டத்தை முடிப்பதற்காக இலக்கு நிர்வகிக்கப்பட்டிருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.
மொத்தம் 950 படுக்கைகளுடன் 10 தளங்களுடனும் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது. முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன், ஆர்டிஐ மூலம் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications