"ஒப்பந்தங்கள் போடுகிறோம் ஓகே.. ஆனால் ஆயுதங்கள் வருவதே இல்லை.." ராஜ்நாத் சிங் இருக்கும்போதே விமானப்படை தளபதி அதிருப்தி!
டெல்லி: பாதுகாப்புத் துறை சார்ந்த முக்கிய தளவாட கொள்முதல் திட்டங்கள் தொடர்ச்சியாகத் தாமதமாவதாக இந்திய விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் கவலை தெரிவித்துள்ளார். பல்வேறு திட்டங்கள் தாமதம் ஆகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் இப்போது சிஐஐ ஆண்டு வணிக உச்சி நடைபெறுகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புப் படை கொள்முதல்கள் எப்போதும் தாமதம் ஆவதாகவும் இதனால் பல திட்டங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

தொடர் தாமதம்
கடற்படை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமர் ப்ரீத் சிங், "பல சமயம், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதே அந்த அமைப்புகள் ஒருபோதும் வரவே வராது என்பது எங்களுக்குத் தெரியும். உரிய காலக்கெடுவில் தளவாடங்களைப் பெறுவது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.. எனக்கு நினைவில் உள்ளவரை எந்தவொரு திட்டமும் சரியான காலக்கெடுவுக்குள் முடிக்கப்படவில்லை. செய்ய முடியாத விஷயத்தை ஏன் உறுதியளிக்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
ஒரு விமானம் கூட வரவில்லை
பாதுகாப்பு அமைப்புகளை டெலிவரி கொடுக்கும் விவகாரத்தில், குறிப்பாக உள்நாட்டுத் திட்டங்களில் பல தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் திட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி 2021இல் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.48,000 கோடி மதிப்பில் 83 கேஜாஸ் போர் விமானங்களைப் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். கடந்தாண்டு மார்ச் மாதமே டெலிவரிகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை ஒரு விமானம் கூட எங்களுக்கு வந்து சேரவில்லை.
தேஜாஸ் மட்டுமின்றி பல முக்கிய பாதுகாப்பு திட்டங்களை இதுபோன்ற தாமதங்கள் பாதித்துள்ளன. தேஜாஸ் எம்கே1 டெலிவரி தாமதம் ஆகியுள்ளது. தேஜாஸ் எம்கே2 மாடலும் கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அதேபோல ஸ்டெல்த் ஏஎம்சிஏ போர் விமானத்தின் மாடலும் இன்னும் வெளியிடப்படவில்லை" என்று கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.
அதிருப்தி
அவர் மேலும் பேசுகையில், "நாம் இந்தியாவில் உற்பத்தி செய்வது பற்றி மட்டும் பேசக்கூடாது.. வடிவமைப்பது பற்றியும் பேச வேண்டும். படைகளுக்கும் தொழில்துறைக்கும் இடையே நம்பிக்கை இருக்க வேண்டும். நாம் மிகவும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதி அளித்தால் அதை எப்படியாவது செய்து காட்ட வேண்டும். மேக் இன் இந்தியா என்பதற்கு விமானப்படை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது.
நாம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தற்காலத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் அதிக உற்பத்தியை நாம் பெறும்.. ஆனால், இன்று நமக்குத் தேவையான பாதுகாப்பு தளவாடங்கள் இன்றே நமக்குத் தேவை. காத்திருக்க முடியாது. நாம் விரைவாகச் செயல்பட வேண்டும்" என்றார்.
ஆபரேஷன் சிந்தூர்
தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசிய அவர், "கடற்படைத் தளபதி கூறியது போல், போரின் தன்மை மாறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும், புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வரும் காலம் எப்படி இருக்கும்.. எதிர்காலத்தில் நமக்கு என்ன தேவை என்பது பற்றிய தெளிவான யோசனையை ஆபரேஷன் சிந்தூர் நமக்கு அளித்துள்ளது" என்றார்.
முதல்முறை இல்லை
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொடர்பாக விமானப்படைத் தளபதி விமர்சிப்பது இது முதல்முறை இல்லை. கடந்த அக்டோபர் மாதம் விமானப்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றபோதே அவர் விமர்சித்து இருந்தார். அப்போது அவர், "இந்தியா ஒரு காலத்தில் ராணுவ தொழில்நுட்பத்தில் சீனாவை விட முன்னணியில் இருந்தது. ஆனால், இப்போது அப்படிச் சொல்ல முடியாது. குறிப்பாக ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் நாம் அதிகம் முன்னேற வேண்டும்" என்றார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications