விடை தெரியாத அந்தவொரு கேள்வி.. கூடவே 10 நொடி மர்மம்.! ஏர் இந்தியா விபத்து! உண்மையில் என்ன நடந்தது
டெல்லி: சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்து நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்து குறித்து முதற்கட்ட ரிப்போர்ட் சமீபத்தில் வெளியானது. இது விபத்திற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்ற மேஜர் தகவலை அளிக்கும் அதேநேரம் சில முக்கிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நொடிகளில் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்திய ஏவியேஷன் துறையில் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஏஏஐபி எனப்படும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

முதற்கட்ட ரிப்போர்ட்
இதற்கிடையே சமீபத்தில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு ஏர் இந்தியா விபத்து குறித்த தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் விமானத்தின் என்ஜின்களை அணைக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான எரிபொருள் சுவிட்சுகள் சற்று நகர்ந்து இருந்ததாகக் கூறப்பட்டு இருந்தது. ஆனால் எதனால் அப்படி நகர்ந்து இருந்தது என்பது குறித்துத் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.
சிக்கல் என்ன
விமானத்தின் CVR எனப்படும் காக்பிட் குரல் பதிவு கருவியில் பதிவாகி இருந்த சிறிய உரையாடலை மட்டும் ஏஏஐபி வெளியிட்டுள்ளது. அதில் ஒரு விமானி மற்றொருவரிடம், "ஏன் சுவிட்சை அணைத்தீர்கள்?" என்று கேட்கிறார். இருப்பினும், தான் அதுபோல செய்யவில்லை என்று மற்றொரு விமானி பதிலளிக்கிறார். ஆனால், அந்தக் கேள்வியை எந்த விமானி கேட்டார்.. எந்த விமானி பதிலளித்தார் என எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அந்த நேரத்தில் துணை பைலட் விமானத்தை இயக்கி வந்த நிலையில், கேப்டன் அதைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். எனவே, துணை விமானி கேப்டனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாரா என்பதே இப்போது கேள்வியாக எழுந்துள்ளது. சுவிட்ச் வேண்டுமென்றே ஆஃப் செய்யப்படவில்லை என்றால் அப்போது என்ன நடந்தது என்பதே என்பதில் மர்மம் இருக்கிறது.
அதேநேரம் ஏஏஐபி அறிக்கையில் விமானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை கூறியிருக்கிறது. இதனால் விசாரணையின் பார்வை விமானக் குழுவினரின் தவறு அல்லது நாசவேலை என்ற பக்கம் திரும்பியுள்ளது.
விடை தெரியாத கேள்வி
எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. எரிபொருள் சுவிட்ச் பற்றிய கேள்வியை எந்த விமானி கேட்டது.. எந்த விமானி இல்லை என்று பதிலளித்தது என்ற கேள்விக்கு இன்னும் பதிலளிக்கவில்லை. இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதில் அங்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.
ஏன் முக்கியம்
இரு பைலட்களுக்கு இடையே தகவல் தொடர்பில் சிக்கல் இருந்ததா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. ஒரு பைலட் சுவிட்ச்சை ஆஃப் செய்யவில்லை எனக் கூறும் நிலையில், விமான டேட்டா என்ன சொல்கிறது.. அதேநேரம் இரண்டு என்ஜின்களும் எதிர்பாராத விதமாகச் செயலிழந்தால் ஸ்விச்சை ஆப் செய்து மீண்டும் ஆன் செய்ய வேண்டும் என்பதே பைலட்களுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல். எனவே, அதைப் பின்பற்றி ஒரு பைலட் சுவிட்சை அணைத்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், விமானத்தின் சிதைவுகளில் சுவிட்ச் எப்படி இருந்தது என்ற மற்றொரு கேள்வியும் எழுந்துள்ளது.
10 நொடி மர்மம்
இது தொடர்பாக விசாரணை நடைமுறைகளை அறிந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் மிஸ் ஆகிறது. விமானிகள் எரிபொருள் சுவிட்சை ஆஃப் செய்து ஆன் செய்துள்ளனர். அதன் பிறகு ஒரு என்ஜின் மீண்டும் செயல்படத் தொடங்கியது. ஆனால், எரிபொருள் ஆஃப் செய்யப்பட்டு மீண்டும் ஆன் ஆக சுமார் 10 வினாடிகள் இடைவெளி இருக்கிறது. அந்த நேரத்தில் என்ன நடந்தது என்ற விளக்கம் இல்லை" என்றார். டிஜிசிஏ இந்த 10 வினாடிகள் மர்மத்திலும் கவனம் செலுத்துகிறது.
எரிபொருள் சுவிட்ச் பிரச்சினை
இதற்கிடையே விமான சுவிட்ச் தொடர்பாக 2018ல் எஃப்ஏஏ கொடுத்த ரிப்போர்ட் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. அதாவது போயிங் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் சுவிட்சுகளில் லாக் செயல்முறை சரியாக இல்லை என எச்சரித்தது. இதனால் எரிபொருள் சுவிட்ச் பைலட் இல்லாமல் தனிச்சையாகவே "ரன்" மற்றும் "கட் ஆஃப்" நிலைகளுக்கு இடையே நகரக்கூடும் என எச்சரித்திருந்தது. இதனால் எஞ்சின் ஆஃப் ஆகும் அபாயம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுவும் இப்போது கவனம் பெற்றுள்ளது. அதேநேரம் விபத்தில் சிக்கியது 11 வயது பழைய விமானம். 2019 மற்றும் 2023இல் அதன் சுவிட்ச்கள் மாற்றப்பட்டன. எனவே, அதில் எந்த டைப் சுவிட்ச் இருந்தது என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக டிஜிசிஏ இப்போது போயிங்கிடம் கூடுதல் தகவல்களைக் கேட்கலாம் எனத் தெரிகிறது. மேலும், அனைத்து இந்திய விமான நிறுவனங்களுக்கும் சுவிட்ச்சை மாற்ற அறிவுறுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications