திடீரென ஆஃப் செய்யப்பட்ட சுவிட்சுகள்.. கடைசி நேரத்தில் ஏர் இந்தியா விமானிகள் பேசியது இதுதான்!
டெல்லி: அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதன் முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், விமானிகள் கடைசியாக என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான விபத்து புலனாய்வு பணியகம் (ஏஏஐபி) 15 பக்கம் கொண்ட அறிக்கையை முதற்கட்டமாக வெளியிட்டிருக்கிறது. விபத்தில் சிக்கியது போயிங் 787-8 ட்ரீம்லைனர் VT-ANB ரக விமானமாகும். இது 11 வருடங்கள் பழமையானது.

விபத்துக்கான காரணம்
இந்த விமானம் ஜூன் 12ம் தேதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் ஆனது. வானத்தில் மேலே எழும்பிய சில வினாடிகளில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் மோதியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் புறப்பட்ட சில நொடிகளில் 'RUN' நிலையிலிருந்து 'CUTOFF' நிலைக்கு மாறியதே விபத்துக்கு காரணம் என்று ஏஏஐபி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விமானிகள் என்ன பேசினார்கள்?
விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரில் ஒரு பைலட் மற்ற பைலட்டிடம், "ஏன் எரிபொருளைத் துண்டித்தாய்?" என்று கேட்பது பதிவாகியுள்ளது. அதற்கு மற்ற பைலட், "தான் துண்டிக்கவில்லை" என்று பதிலளித்துள்ளார். விமானத்தை இயக்கியவர் இணை பைலட் கிளைவ் குண்டர். பைலட் இன் கமாண்ட் சுமீத் சபர்வால். இவர் விமானத்தை கண்காணிக்கும் பணியில் இருந்தார்.
விமானிகளின் அனுபவம்
சபர்வாலுக்கு போயிங் 787 விமானத்தை இயக்கியதில் சுமார் 8,600 மணி நேரத்திற்கும் அதிகமாக அனுபவம் இருக்கிறது. கிளைவுக்கு 1,100 மணி நேரத்திற்கும் அதிகமாகவும் அனுபவம் இருந்தது. விமானங்களை இயக்க இந்த அனுபவம் போதுமானதுதான். விமானிகள் இருவரும் விமானத்தை இயக்குவதற்கு முன்பு போதுமான நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தில் 10 கேபின் ஊழியர்கள் மற்றும் 230 பயணிகள் இருந்தனர். இந்த துயர சம்பவத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் மற்றும் பொதுமக்கள் 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக்குக்கு புறப்பட்ட போது இந்த விபத்து நடந்திருக்கிறது.
எரிபொருள் கட்
அந்த அறிக்கையின்படி, விமானம் புறப்பட்டதற்கும் விபத்துக்குள்ளானதற்கும் இடைப்பட்ட நேரம் சுமார் 30 வினாடிகள் ஆகும். CUTOFF நிலையில் சுவிட்சுகள் சில வினாடிகள் இருந்த பிறகு, விமானத்தின் இரண்டு என்ஜின்களுக்கான சுவிட்சுகளும் CUTOFF நிலையிலிருந்து RUN நிலைக்கு மாறின. இதன் மூலம் விமானிகள் என்ஜின்களின் வேகத்தை மீட்டெடுக்க முயற்சித்தது தெளிவாகிறது. ஆனால் விமானம் மிகக் குறைந்த உயரத்தில் இருந்ததால், என்ஜின்களால் முழு வேகத்தை கொடுப்பதற்கு முன்னரே விமானம் தரையில் மோதியுள்ளது.
முக்கிய சுவிட்சுகள்
விமான பைலட்டுகள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் RUN/OFF என்பது திட்டமிட்ட செயலாகத்தான் இருக்க வேண்டும். தற்செயலாக அவை RUN/OFF ஆக சாத்தியமற்றது. இந்த சுவிட்சுகள் பாதுகாக்க இருபுறமும் அடைப்புக்குறிகள் உள்ளன. மேலும், ஒரு ஸ்டாப் லாக் பொறிமுறையும் உள்ளது, இது பைலட்டுகள் சுவிட்சை RUN மற்றும் CUTOFF ஆகிய இரண்டு நிலைகளில் இருந்து மாற்றுவதற்கு முன்பு அதை உயர்த்த வேண்டும்.
யார் மேல் தவறு?
இந்த சுவிட்சுகள் பொதுவாக விமானம் புறப்படுவதற்கு முன் என்ஜின்களைத் ON செய்யவும், தரையிறங்கிய பின் அவற்றை அணைக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படும். விமானம் பறக்கும்போது என்ஜினில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது சேதம் அடைந்தாலோ மட்டுமே எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும்.
இப்படி திடீரென என்ஜினை ஆஃப் செய்வது என்பது மிகவும் பாதுகாப்பான நேரத்தில் மட்டுமே செய்யப்படும். அதாவது ஆஃப் செய்யப்பட்ட என்ஜினை மீண்டும் சில விநாடிகளில் ஆன் செய்து இயக்க முடியும் என்று உறுதியாக தெரிந்தால், அதற்கான நேரம் இருந்தால் மட்டுமே என்ஜினை ஆஃப் செய்வார்கள்.
முழு விசாரணை
எப்படி இருப்பினும் தற்போது கிடைத்துள்ள அறிக்கையின்படி, என்ஜினுக்கு எரிபொருள் போகவில்லை. இதற்கு காரணம் எரிபொருள் சுவிட் ஆஃப் செய்யப்பட்டதுதான் என தெரிய வந்திருக்கிறது. இது எப்படி ஆஃப் ஆனது? விமானிகள் ஆஃப் செய்தார்களா? அல்லது தானாக ஆஃப் ஆனதா? என்பது குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இது முதற்கட்ட அறிக்கைதான் என்பதால் இதை வைத்து விபத்துக்கான காரணம் என்ன என்பதை 100% உறுதியாக சொல்லிவிட முடியாது. அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் மேலதிக விசாரணையில் வரும் தகவல்களை வைத்துதான் விபத்துக்கான உண்மையான காரணத்தை உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications