ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் நடுவானில் கோளாறு: டெல்லி வராமல் ஹாங்காங்கிற்கே திரும்பியது
டெல்லி: ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியாவில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி சென்றுள்ளது. ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் AI315 - ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு இன்று காலை புறப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஹாங்காங்கிற்கே திரும்பி தரையிறங்கியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12 ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இதேபோல் விமான விழுந்த பிஜே கல்லூரி விடுதியின் இடிபாடுகளுக்குள் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விமான விபத்து விமான பயணம் மேற்கொள்பவர்களின் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதற்கிடையே இன்று ஹாங்காக்கில் இருந்து டெல்லி வர இருந்த ஏர் இந்தியா விமானம் பாதி வழியில் திரும்பியுள்ளது.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறி மீண்டும் விமான ஹாங்காங்கிற்கே திருப்பியுள்ளார். இதையடுத்து அங்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இந்த சம்பவத்தால் விமான பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியாவில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி சென்றுள்ளது. விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால், உடனடியாக விமானத்தை ஹாங்காங்க் திரும்பி வர அனுமதி கேட்டு இருக்கிறார்.
இதற்கான அனுமதி கிடைத்தவுடன் விமானம் ஹாங்காங்கில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் AI315 - ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு இன்று காலை புறப்பட்டுள்ளது.
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் ஹாங்காங்கில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் தேவையான சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுள்ள இடையூறுகளினால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க பயணம் செய்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது பிளைட் ரேடார் 2 தரவுகளின்படி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 90 நிமிடங்களில் மீண்டும் ஹாங்காங்கிற்கே திரும்பியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications