இஸ்ரேலை அட்டாக் செய்ய தயாராக இருந்த ஈரான்.. அடுத்தடுத்து பாஸ் ஆன ஏர் இந்தியா பிளைட்.. வெளியான திடுக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை மேற்கொள்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ஏர் இந்தியாவின் 2 விமானங்கள் அந்த விமான பரப்பை கடந்து சென்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடை போர் 6 மாதங்களுக்கும் மேல் நீடித்து வருகிறது.

Air India flights flew through Iran-controlled airspace just hours before aerial strike on Israel

இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் என பல்வேறு அமைப்பினர் இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் நாடு ஆயுதங்களை வழங்கி உதவி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.

இஸ்ரேல் மீது தாக்குதல்:
இந்த சூழலில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அந்த நாட்டு தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ தளபதிகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். இதனால், கடும் கோபம் அடைந்த ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாரானது.

அதன்படி கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு முதல் இஸ்ரேலை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்க தொடங்கியது. இஸ்ரேலின் பல்வேறு நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்து சுமார் 5 மணி நேரம் 300-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் வீசியது. இதை முன்கூட்டியே கணித்து இருந்த இஸ்ரேலும், டிரோன்களை வானிலேயே இடைமறித்து தாக்கி அழித்தது.

ஏர் இந்தியா விமானம்: இரு தரப்புக்கும் இடையே வெடித்த இந்த மோதல் போராக மாறிவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி கொண்டன. இதனால், தற்போது, இந்த மோதல் மேலும் அதிகரிக்காமல் உள்ளது. இருந்தாலும் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தணிந்தபாடில்லை.

இதனிடையே, இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளி பரப்பை இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் கடந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்கு முன்பு பறந்த விமானங்கள்: பிளைட் ரேடார் 24-ல் உள்ள தரவுகளின் படி, ஏர் இந்தியாவின் 116 மற்றும் 131 ஆகிய இரண்டு விமானங்கள் ஈரான் வான்பரப்பை கடந்து சென்றுள்ளன. மும்பையில் இருந்து நியூயார்க் மற்றும் மும்பை டூ லண்டன் செல்லும் விமானங்கள், தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பே அந்த வான்பரப்பை பயன்படுத்தியதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா விளக்கம்: போர் பதற்றம் நிறைந்த சூழலில், ஏர் இந்தியா விமானங்கள் ஈரான் வான்பரப்பை கடந்து சென்றதாக வெளியான செய்தி பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனினும், இது தொடர்பாக ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், பயணிகள், சிப்பந்திகள் மற்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஏர் இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

எனவே, பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. எந்த ஒரு நாட்டு வான்பரப்பாக இருந்தாலும்.. பாதுகாப்பு பிரச்சினை இருந்தால் அதில் நாங்கல் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். மத்திய கிழக்கில் உள்ள சூழல் குறித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்களிடம் நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம்.

பயணிகள் அதிர்ச்சி: ஏப்ரல் 13 ஆம் தேதி ஈரான் வான்பரப்பை பயன்படுத்த எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதி வழங்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா மட்டும் இன்றி மலேசியன் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களும் ஈரான் வான்பரப்பை அதே நாளில் பயன்படுத்தியிருக்கின்றன.

ஈரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் வரை அந்த நாட்டின் வான்பரப்பை ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்கள் பயன்படுத்தி வந்திருக்கும் தகவல் விமான பயணிகளை அதிர வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+