டெல்லியில் காற்று மாசு உச்சத்தை தொட்டது! முதியவர்கள், நோயாளிகள் கடும் பாதிப்பு!
டெல்லி: டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தொடங்கி ஜனவரி இறுதி வரை காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் காற்று மாசு காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் டெல்லியில் காற்று மாசு பெரும் சிக்கலாக உருவெடுக்கும். இந்த முறையும் காற்று மாசு மக்களை பாதிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் பெரும்பாலும் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, வாகனங்கள் மூலம் மாசு ஏற்படுவதில்லை.

கட்டிடங்களை இடித்தல், டெல்லியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகள் போன்றவற்றால் டெல்லி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
காற்றில் உள்ள மாசை அளவிட காற்று தரக் குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது. இது 0-500 வரை அளவை கொண்டிருக்கிறது. இதில் 0 என்பது சுவாசிக்க ஏற்ற நல்ல தரமான காற்றாகும். இதுவே 500 எனில், அந்த காற்று உடனடியாக மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது டெல்லியில் காற்றின் தரம் 300ஐ விட அதிகமாக இருக்கிறது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஐடிஓ பகுதியில் AQI 226, இந்தியா கேட் பகுதியில் AQI 251, பிகாஜி காமா பிளேஸ் பகுதியில் AQI 273, டெல்லி எய்ம்ஸ் பகுதியில் AQI 253 என காற்றின் தரம் பதிவாகியுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த 13 மாசு கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நிரை பீய்ச்சி அடிப்பதன் மூலம் காற்றில் உள்ள மாசை நீக்குகிறது.
அசோக் விஹார், துவாரகா, முண்ட்கா, ஜஹாங்கிர்புரி, ரோகிணி, நரேலா, ஓக்லா, பஞ்சாபி பாக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், டிராபிக் ஜாம் உள்ளிட்டவற்றால் இப்பகுதிகளில் காற்று மாசு அதிக அளவில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மாசு குறித்து டெல்லி மக்கள் கூறுகையில், "அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஆனால், இப்போது டெல்லி பனி படர்ந்ததை போல காட்சியளிக்கிறது. அந்த அளவுக்கு காற்று மாசுபட்டிருக்கிறது. இதனால் மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. குழந்தைகளும், முதியவர்களும், நோயாளிகளும் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்" என்று கூறியுள்ளனர்.
டெல்லியில் காற்று மாசை குறைக்க மாநில அரச தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications