பெட்ரோல் - டீசல் நிரப்ப கட்டுப்பாடு.. டெல்லியில் வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்று கட்டாயம்
டெல்லி: நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக உள்ளது. மேலும் தற்போது அதிகப்படியான பனிமூட்டம் காற்று மாசுபாட்டை இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று இல்லாதவர்களுக்கு நள்ளிரவு 12 மணி முதல் பெட்ரோல் - டீசல் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டோல்கேட்டுகளை மூட நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த புதிய நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு என்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பது தொடர்ந்து வருகிறது.
இந்த ஆண்டும் இப்போது காற்று மாசுபாடு அதிகமாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் முதல்வர்கள் முதியவர்கள் வரை பலரும் சுவாச பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் டெல்லியில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது. நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகன போக்குவரத்து சரியும். காற்று மாசு குறையும் என்று எண்ணப்பட்டது.
ஆனால் நிலைமை இன்னும் சீராகவில்லை. இந்நிலையில் தான் டெல்லியில் இயங்கும் வாகனங்கள் கட்டாயமாக மாசு கட்டுப்பாட்டு சான்றை வைத்திருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால் எரிபொருள் வழங்க கூடாது என்று இந்த உத்தரவை டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஜிந்தர் சிங் சிர்சா பிறப்பித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் பிஎஸ் 5 ரகத்தை சேராத வாகனங்களை இயக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த புதிய நடவடிக்கையை பலரும் விமர்சனம் செய்த வருகின்றனர். இதுபற்றி வாகன டிரைவர்கள் கூறுகையில், ‛‛அரசு தண்ணீர் தெளிப்பு இயந்திரத்தை ஆங்காங்கே வைத்துள்ளது. இது காற்று மாசுபாட்டை குறைக்கும் என்று நம்புகின்றனர்.
அரசு ஏராளமான பணத்தை செலவழிக்கும் பட்சத்தில் காற்று மாசுபாட்டை தடுக்க ஏன் செலவழிப்பது இல்லை? கடந்த ஆண்டு கெஜ்ரிவால் அரசு பல இடங்களில் பில்டர்ஸ், காற்று சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் வைத்தது. இப்போது அது எங்கே? இப்படி இருக்கும்போது காற்று மாசுபாடு எப்படி இருக்கும்? பிற மாநிலங்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படாத நிலையில் டெல்லி மட்டும் இப்படி பாதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
முன்னதாக, காற்று மாசு தொடர்பான பொது நல மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது ‛‛டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த பிரச்னை ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வாக மாறி விட்டது.
எனவே, நடைமுறைக்கு சாத்தியமான அம்சங்களை வைத்தே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 'எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை தற்காலிகமாக மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது பற்றியோ பரிசீலிக்க வேண்டும்' என டெல்லி நகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது'' என உத்தரவிடப்பட்டது.
-
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications