கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் சிபிஐ.. ப.சிதம்பரத்திற்கு புதிய சோதனை.. அடுத்த அதிரடி மூவ்
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு புதிய சோதனையாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அடுத்த அதிரடி திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு புதிய சோதனையாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அடுத்த அதிரடி திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது ப. சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார். எது நடக்க கூடாது என்று நினைத்தாரோ அதுவே ப. சிதம்பரம் வழக்கில் தற்போது நடந்துவிட்டது.
இவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் அணை போட்டுகொண்டு உள்ளது. அதேசமயம் சிபிஐ, அமலாக்கத்துறை இரண்டும் அவருக்கு வேறு விதங்களில் செக் வைக்கவும் தயாரா இருக்கிறது.

எப்படி கைது
மூன்று வாரங்களுக்கு முன் ஐஎன்எக்ஸ் வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் இவர் 15 நாட்கள் விசாரிக்கப்பட்டார். அதன்பின் சிபிஐ, விசாரணை எல்லாம் முடிந்தது, எங்களுக்கு காவல் வேண்டாம் என்று கூறியது. இதனால் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அமலாக்கத்துறை கைது
அதேபோல் ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறையும் ப. சிதம்பரத்தை கைது செய்ய முயன்று வருகிறது. இதற்கு எதிராக ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதனால் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அடுத்த நொடியே அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்படுவார்.

அடுத்த வழக்கு
கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கிறியே சிவாஜி என்று சிவாஜி படத்தில் விவேக் கூறும் வசனம் போல இன்னொரு திட்டத்தையும் சிபிஐ கையில் எடுத்துள்ளது. ப. சிதம்பரம் சிக்கி இருக்கும் இன்னொரு வழக்கான ஏர்செல் மேக்சிஸ் வழக்குதான் அது.

முன் ஜாமீன் ரத்து
ஏர்செல் மேக்சிஸ் முறைகேட்டில் ப. சிதம்பரம் நேற்றுதான் முன் ஜாமீன் பெற்றார். அவரின் மகன் எம்பி கார்த்தி சிதம்பரமும் முன் ஜாமீன் பெற்றார். டெல்லி சிபிஐ நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பிற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை இரண்டும் இன்று டெல்லி ஹைகோர்ட்டில் முறையிட உள்ளது.

செக்
இன்னும் சற்று நேரத்தில் இதற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்ய உள்ளது. ப. சிதம்பரத்தின் முன் ஜாமீனை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளது. இதனால் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் வழக்கில் தப்பினாலும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிக்குவார் என்று கூறுகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications