5 மாநிலங்களில் யாருக்கு வெற்றி? நாளை வாக்கு எண்ணிக்கை.. பரபரப்பில் கட்சிகள்
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11ம் தேதியான நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் விறுவிறுப்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும், நவம்பர் மற்றும் டிசம்பரில் தேர்தல்கள் நடைபெற்றன.
சட்டீஸ்கரில் இரு கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20ம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மத்திய பிரதேசம், மிசோராமில் நவம்பர் 28ம் தேதியிலும், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதியிலும், சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

மாலைக்குள் முழு ரிசல்ட்
இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்பட உள்ளது. காலை 11 மணிக்குள் 5 மாநிலங்களிலும் வெற்றி பெறப்போவது யார் என்பது தொடர்பாக, டிரெண்ட் வெளியாகிவிடும். மாலைக்குள் வாக்குகள் முழுமையாக, எண்ணப்பட்டு, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

பாஜக மீது எதிர்பார்ப்பு
மத்திய பிரதேசத்தில், 306 வாக்கு எண்ணிக்கை மையங்களும், தெலுங்கானாவில், 43 வாக்கு எண்ணிக்கை மையங்களும், சட்டீஸ்கரில் 27 வாக்கு எண்ணிக்கை மையங்களும், மிசோராமில் 40 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி, நடைபெறுவதால் அங்கு அந்த கட்சிக்கு அக்கினி பரிட்சை காத்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications