மாவட்ட அளவில் தொற்றுநோய் தடுப்பு மையங்கள்.. தாலுகா அளவில் சுகாதார ஆய்வகங்கள்.. நிர்மலா சீதாராமன்
டெல்லி: தொற்றுநோய் தடுப்பு மையங்கள் அனைத்து மாவட்ட அளவிலும், பொது சுகாதார ஆய்வகங்கள் தாலுகா அளவிலும் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறைக்கு சில முக்கிய பொருளதார சிறப்பு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் அதற்கு முன்பாக சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பேட்டியின் போது பட்டியலிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு பிரதமர் ஏற்கனவே ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு மாதங்களில் 15 ஆயிரம் கோடி ரூபாய் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசுகையில், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு பிரதமர் ஏற்கனவே ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு மாதங்களில் 15 ஆயிரம் கோடி ரூபாய் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகை அதிகரிக்கப்படும்.
சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்படும். குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் தொற்று நோய்கள் தடுப்பு மையம் அமைக்கப்படும். தாலுகா அளவில் பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கப்படும், எதிர்காலத்தில் தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு இந்த வசதிகள் அமைக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications
