டெல்லி: 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சி- சத்தியம் அடித்து சொல்லும் அனைத்து எக்ஸிட் போல் முடிவுகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 36-க்கும் அதிகமான இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. டெல்லியில் வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகள் பெரும்பாலும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.

டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 தொகுதிகளையும் 2020-ம் ஆண்டு 62 தொகுதிகளையும் வென்று தொடர்ந்து 2 முறை ஆட்சியை அமைத்திருந்தது. அதற்கு முன்னர் 2013-ல் சொற்ப நாட்கள் ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் இருந்தது.

delhi exit polls 2025 delhi election exit poll results 2025

இந்த நிலையில் தற்போது டெல்லியில் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்கின்றன.

2025-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள்- மொத்தம் 70 இடங்கள் (பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள்)

Matrize

பாஜக 35-40 இடங்கள்
ஆம் ஆத்மி 32-37 இடங்கள்
காங்கிரஸ் 0-1 இடம்

People's Pulse

பாஜக 51-60 இடங்கள்
ஆம் ஆத்மி 10-19 இடங்கள்

P-Marq

பாஜக - 39-49 இடங்கள்
ஆம் ஆத்மி 21-31 இடங்கள்
காங்கிரஸ் 0-1 இடம்

Chanakya Strategies

பாஜக 39-44 இடங்கள்
ஆம் ஆத்மி 25-28 இடங்கள்
காங்கிரஸ் 2-3 இடங்கள்

JVC

பாஜக 39-45 இடங்கள்
ஆம் ஆத்மி 22-31 இடங்கள்
காங்கிரஸ் 0-2 இடங்கள்
இதர 0-1 இடம்

People's Insight

பாஜக 40-44 இடங்கள்
ஆம் ஆத்மி கட்சி 25-29 இடங்கள்
காங்கிரஸ் 0-1 இடம்

Poll Diary

பாஜக 42-50 இடங்கள்
ஆம் ஆத்மி 18-25 இடங்கள்
காங்கிரஸ் 0-2 இடங்கள்

Poll of Polls

பாஜக 41-47 இடங்கள்
ஆம் ஆத்மி 22-29 இடங்கள்
காங்கிரஸ் 0-2 இடங்கள்
இதர 0-1

DV Research

பாஜக 36-44 இடங்கள்
ஆம் ஆத்மி- 26-34

ஆம் ஆத்மி தான் ஆட்சி அமைக்கும் என Weepreside கருத்து கணிப்பு

Weepreside எக்ஸிட் போல் முடிவுகள்

ஆம் ஆத்மி 46-52 இடங்கள்
பாஜக- 18-23 இடங்கள்
காங்கிரஸ் 0-1 இடம்

Mind Brink

ஆம் ஆத்மி 44-49 இடங்கள்
பாஜக 21-25 இடங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+