கர்நாடகாவில் காங்கிரசுடன் கூட்டணி... மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
டெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 10 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான தேவகவுடா உடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நடத்திய ஆலோசனையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டது.
கர்நாடகாவில் 28 தொகுதிகள் உள்ளன. இதில், தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரசிடம், மதசார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தி வந்தது. இதனால் இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.
கடந்த இரு மாதங்களாக இரு கட்சி தலைவர்களும் தொகுதி பங்கீடு தொடர்பாக, 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தநிலையில், தேவகவுடாவை சந்தித்து ராகுல் காந்தி பேசிய நிலையில்,10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
கடந்த 3 மக்களவைத் தேர்தலிலும் மஜத 2-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட வெற்றிப்பெறவில்லை. எனவே 12 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட சூழலில், 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
மேலும், மண்டியா, மைசூரு, தும்கூரு, ஹாசன், கோலார், சிக்பளாப்பூர், பெங்களூரு ஊரகம் உள்ளிட்ட தொகுதிகளை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications