மோடி அமைச்சரவையில் 71 பேர்.. இன்னும் எத்தனை பேர் அமைச்சராகலாம்.. லிமிட் எவ்வளவு? இதன் ரூல்ஸ் என்ன
டெல்லி: பிரமதர் மோடியுடன் இன்று 72 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் எத்தனை பேர் வரை அமைச்சரவையில் இடம் பெறலாம். இதன் விதிகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதிலும் பாஜக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவு"ன் ஆட்சியை அமைத்தனர்.. இதையடுத்து இன்று பிரமதர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.
72 பேர்: ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் ஒரே தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் மோடி படைத்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 72 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பிரதமர் தவிர்த்துப் பார்க்கும் போது அவர்களில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள், 5 பேர் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 36 பேர் இணை அமைச்சர்கள் ஆவர். மேலும், கட்சி வாரியாக பார்க்கும் போது அவர்களில் 61 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.. மற்றவர்கள் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மத்திய அமைச்சரவையில் அதிகபட்சமாக 81 பேர் இருக்கலாம் என்ற நிலையில், இப்போது மொத்தம் 72 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். ஏன் அதிகபட்சம் 81 பேர் மட்டும் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்க வேண்டும்.. கடந்த கால மோடி அமைச்சரவையில் எத்தனை பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சட்டம் என்ன: அரசியலமைப்பு (91வது திருத்தம்) சட்டம், 2003, இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளில் அதிகபட்சம் எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகிறது. பிரதமர் உட்பட மத்திய அமைச்சரவையில் உள்ளவர்களின் எண்ணிக்கை லோக்சபா மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15% தாண்டக் கூடாது என்பதை இந்த சட்டம் தெளிவாகச் சொல்கிறது.
அதன்படி லோக்சபாவில் 543 பேர் இருக்கும் நிலையில், அதிகபட்சமாகப் பிரதமருடன் சேர்த்து 81 அமைச்சர்கள் இருக்கலாம். அரசியல் நலனுக்காக அதிக பேருக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுப்பதைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயம் ஒரே அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளைக் கவனிக்க வேண்டி இருக்கிறது.
அதிகபட்ச அமைச்சர்கள் எண்ணிக்கையில் தான் லிமிட் உள்ளதே தவிர.. எத்தனை துறைகள் இருக்க வேண்டும் என்பதற்கு லிமிட் இல்லை. அரசின் கொள்கை, தேவை அடிப்படையில் புதிய அமைச்சகங்களை உருவாக்கலாம் அல்லது கலைக்கலாம்.
மோடி அமைச்சரவை: 2014 தேர்தலுக்குப் பிறகு, மோடி முதலில் பிரதமராகப் பதவியேற்ற போது அவருடன் 23 கேபினட் அமைச்சர்கள், 10 தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் 12 இணை அமைச்சர்கள் உட்பட 45 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றனர். சுமார் ஆறு மாதங்கள் கழித்து 2014 நவம்பர் 9இல் புதிதாக 21 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்ற நிலையில், மொத்த அமைச்சர்கள் எண்ணிக்கை 66ஆக உயர்ந்தது. அடுத்தடுத்து ஆண்டுகளில் அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மோடி 2.o: 2019 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தொடக்கத்தில் 24 கேபினட் அமைச்சர்கள், 9 தனி பொறுப்புடன் கூடிய கூடிய அமைச்சர்கள் மற்றும் 25 இணை அமைச்சர்கள் என 58 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இருப்பினும், தேர்தலுக்கு முன்பு 29 கேபினட் அமைச்சர்கள், 3 தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் 42 மாநில அமைச்சர்கள் இருந்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications