Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய கட்சியை தொடங்கினார் அமரீந்தர் சிங்.. சட்டசபை தேர்தலில் பாஜக உடன் கூட்டணி? அடுத்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தைச் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள அமரீந்தர் சிங், 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சியையும் தொடங்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் ஆட்சியுள்ள பஞ்சாப் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீட்டிக்கிறது.

அங்கு முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் பல மாதங்களாக நீட்டித்தது.

பஞ்சாப் குழப்பம்

பஞ்சாப் குழப்பம்

அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்கத் தேவையான காய்களையும் நகர்த்தத் தொடங்கினார் சித்து. மேலும், சுமார் 60க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங்கை நீக்க வேண்டும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதால். இதையடுத்து முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

அமரீந்தர் சிங்

அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காங்கிரஸ் முதல்வராக நியமித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அங்குள்ள மக்கள்தொகையில் சுமார் 33% பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். அதேநேரம் காங்கிரஸ் தலைமையில் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த அமரீந்தர் சிங், காங்கிரஸ் தலைமை தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும் தனது உழைப்பைப் புறம் தள்ளிவிட்டதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பஞ்சாப்

பஞ்சாப்

கடந்த சில வாரங்களுக்கு முன், அவர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தலாவதாக அறிவித்தார். இது பஞ்சாப் சிக்கலை மேலும் மோசமாக்கியது. இருப்பினும், அமீர்ந்தர் சிங்கும் பாஜகவில் இணையவில்லை, நவ்ஜோத் சிங் சித்துவும் தனது ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

சோனியா காந்திக்குக் கடிதம்

சோனியா காந்திக்குக் கடிதம்

அதேநேரம், காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ள அமரீந்தர் சிங், விரைவில் புதுக்கட்சி தொடங்குவார் எனக் கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியாகி வந்தன. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள அமரீந்தர் சிங், 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சியையும் தொடங்கியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 7 பக்கங்களை கொண்ட ராஜினாமா கடிதத்ததை எழுதியுள்ள அவர், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி மீது பல்வேறு புகார்களையும் குறிப்பிட்டுள்ளார்.

கடும் தாக்கு

கடும் தாக்கு

அந்தக் கடிதத்தில், நவ்ஜோத் சித்துவைக் "ஒரு நிலையற்ற நபர் என்றும் பாகிஸ்தான் உடன் ஆழமான உறவு வைத்திருப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட நபரைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் அவருக்கு ஆதரவளித்தனர் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுச்செயலாளர் ஹரிஷ் ராவத் சொல்வதைக் கேட்டு காங்கிரஸ் தலைமை கண்ணை மூடிக்கொண்டு முடிவுகளை எடுப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

நான் நினைத்திருந்தால்

நான் நினைத்திருந்தால்

காங்கிரஸ் தலைமை தன்னை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், முதல் நாள் மாலை வரை தனக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தவர்கள், மறுநாள் காலை திடீரென ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்களை சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தனது முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும் என்று இருப்பினும் அது போன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபடவில்லை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சி

புதிய கட்சி

மேலும், அவர் 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சியையும் தொடங்கியுள்ளார். ஏற்கனவே, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் அமரீந்தர் சிங் கைகோர்க்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+