அமலாக்கப் பிரிவு சம்மன்களுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமேசான் ரிட் மனு
டெல்லி: பியூச்சர் நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு விசாரணையை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவின் ஈ காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2019-ல் பியூச்சர் குழுமத்தில் ரூ1430 கோடி முதலீடு செய்திருந்தது. இதன் மூலம் பியூச்சர் நிறுவனத்தின் 49% பங்குகளை அமேசான் கைப்பற்றியது.

இன்னொரு பக்கம் ப்யூச்சர் நிறுவனம் தமது சில்லறை வர்த்தகம் சார்ந்த சொத்துகளை ரிலையன்ஸ் குழுமத்துக்கு ரூ24,500 கோடிக்கு விற்பனை செய்தது. இதற்கு அமேசான் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமேசான் மற்றும் ப்யூச்சர் குழுமங்கள் பரஸ்பரம் வழக்கு தொடர்ந்தன.
மேலும் இந்திய காம்பெடிசன் கமிஷன் எனப்படும் சி.சி.ஐ., அமேசான் - ப்யூச்சர் இடையேயான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியது. பியூச்சர் நிறுவனத்தில் அமேசான் முதலீடு செய்வதற்கான அனுமதியையும் ரத்து செய்தது சி.சி.ஐ. மேலும் அமேசான் நிறுவனத்துக்கு ரூ 200 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் வெளிநாட்டு முதலீட்டு சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமலாக்கப் பிரிவு வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் தங்களது நிறுவனத்துக்கு சம்மன் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications