தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்.. ரவி நீரை மொத்தமாக நிறுத்தும் இந்தியா.. இனி தான் ஆட்டமே இருக்கு
டெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி நீரைத் தடுக்கும் நடவடிக்கை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அணை கட்டுமானம் இறுதிக் கட்டத்தில் இருக்கும் சூழலில், கட்டுமானம் முடிந்த பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி நீர் முழுமையாகத் தடுக்கப்படும்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியது அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் சிந்து நீரை இந்தியா தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும். இருப்பினும், விலகல் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நீரை தடுக்கும் உள்கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை. இதனால் பாகிஸ்தானுக்கு நீர் போய்க் கொண்டு இருந்தது.

புதிய அணை
ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. ரவி நதியின் குறுக்கே ஷாபூர் கண்டி அணையின் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. அணை செயல்பாட்டுக்கு வந்தவுடன், ரவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் பாய்வதை இந்தியா தடுக்க முடியும் என்று ஜம்மு-காஷ்மீர் அமைச்சர் ஜாவேத் அகமது ராணா தெரிவித்தார். ஷாபூர் கண்டி அணையின் பணிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோடைக் காலத்தில் வறட்சியால் பாதிக்கப்படும் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு ரவி நீர் திருப்பி விடப்படும்!
ஷாபூர் அணை
இந்த ஷாபூர் அணையின் கட்டுமானம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1979இல் தொடங்கப்பட்டது. ரவி நதியின் நீர் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் ஷாபூர் கண்டி அணைத் திட்டம் வகுக்கப்பட்டது. 1982இல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இருப்பினும், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசுகளுக்கு இடையேயான பிரச்சினைகளால் கட்டுமானம் தடைப்பட்டது. 2008ஆம் ஆண்டில், இத்திட்டம் ஒரு தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டது.
எவ்வளவு செலவு
3,394.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த அணை, 55.5 மீட்டர் உயரம் கொண்டது. இதில் பஞ்சாப் அரசு 2,694.02 கோடி (சுமார் 80 சதவீதம்) பங்களிக்கிறது, மீதமுள்ள 700.45 கோடியை (20 சதவீதம்) மத்திய அரசு வழங்குகிறது. அணையுடன் 7.7 கி.மீ. நீளமுள்ள ஒரு புனல் மின் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் பஞ்சாப்பில் சுமார் 5,000 ஹெக்டேர் நிலம், ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மற்றும் சம்பா பகுதிகளில் 32,173 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசன வசதி கிடைக்கும்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்திருந்தாலும் கூட இந்த அணை கட்டுமானத்திற்குப் பிரச்சினை இருக்காது. ஏனென்றால் சிந்து ஒப்பந்தத்தின்படியும் கூட ரவி நதி மீது இந்தியாவுக்கே பிரத்யேக உரிமை உள்ளதால் அதில் பிரச்சினை இல்லை.
இந்தியா பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதலுக்கு மறுநாள் அதாவது ஏப்ரல் 23ம் தேதி சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் பல மோதல்கள் ஏற்பட்டு இருந்த போதிலும், இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறும் முடிவை எடுப்பது இதுவே முதல் முறை.
இது நிஜமாகவே பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் விவசாயத்தில் 80-90 சதவீதம் சிந்து நதி அமைப்பைச் சார்ந்துள்ளது. பாகிஸ்தான் நீர் சேமிப்பு திறனும் மோசமாகவே இருக்கிறது. சிந்து நதி நீர் இல்லை என்றால் ஒரு மாதம் கூட பாகிஸ்தானால் சமாளிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் அணைகள்
ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகள் பாகிஸ்தானுக்கும் ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகள் இந்தியாவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு சிந்து படுகையில் சவால்கோட், ரட்லே, பர்சர், பகல்துல், குவார், கிரு, கீர்த்தாய் I மற்றும் II போன்ற பல நீர்மின் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதேபோல சவால்கோட் திட்டப் பணிகளை விரைவுபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?










Click it and Unblock the Notifications