தொடரும் காளி ஆவணப் பட சர்ச்சை.. "இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது!" லீனா மணிமேகலை ட்வீட்
டெல்லி: காளி ஆவணப் பட ஃபஸ்ட் லுக் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், இயக்குநர் லீனா மணிமேகலை இப்போது பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
Recommended Video
"காளி" என்ற ஆவணப் படத்தை இயக்குநர் லீனா மணிமேகலை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் ஒருவர் புகை பிடிப்பது போலவும் கையில் தன்பால் ஈர்ப்பாளர்களின் கொடியை வைத்திருப்பது போலவும் படம் இடம் பெற்று இருந்தது.

சர்ச்சை
இந்த போஸ்டர்கள் இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். இந்த ஆவணப் பட போஸ்டர் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. இந்து கடவுள்களை திட்டமிட்டு அவதூறு செய்வதாக லீனா மணிமேகலை மீது புகார் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீக்கம்
மேலும், ட்விட்டர் தளத்தில் இருந்தும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு உள்ள நிலையில், இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது என்று லீனா மணிமேகலை பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, மணிமேகலை இந்து தெய்வத்தின் ஆடைகளை அணிந்து இரண்டு பேர் புகைபிடிக்கும் ஃபோட்டத்தை ட்வீட் செய்து இருந்தார். இந்தப் படம் காளி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை போலவே இருந்தது.

படத்தில் இருந்து இல்லை
இதையடுத்து பலரும் அவருக்கு எதிராக ட்விட்டர் தளத்தில் கருத்து பதிவிட தொடங்கினர்.. இந்நிலையில், இந்த படம் தனது ஆவணப்படத்தில் இடம் பெற்று இருக்கும் காட்சி இல்லை என்றும் ஆனால் கிராமப்புற இந்தியாவின் நிஜ வாழ்க்கையின் ஸ்னாப்ஷாட் என்று தெளிவுபடுத்தினார். மேலும், இந்துத்துவா ஒரு போதும் இந்து மதம் ஆகிவிடாது என்றும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்துத்துவா
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நாட்டுப்புற நாடகக் கலைஞர்கள் தங்கள் நடிப்பிற்குப் பின்னர் அரங்கேற்றத்திற்குப் பின்னர் எப்படி ஓய்வு எடுப்பார்கள் என பாஜக ஊதியம் பெறும் ட்ரோல் ராணுவத்திற்குத் தெரியாது. இது எனது படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி இல்லை. இந்த சங்பரிவாரங்கள் தங்கள் இடைவிடாத வெறுப்பு மற்றும் மதவெறியால் அழிக்க விரும்பும் அன்றாட கிராமப்புற இந்தியாவில் இருந்து வருகிறது. இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

காளி
காளி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டர் தளம் நீக்கி உள்ளது. சட்ட கோரிக்கை காரணமாக இந்த ட்வீட் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ட்விட்டரின் இந்த நடவடிக்கை நகைப்பிற்குரியது என்று லீலா மணிமேகலை விமர்சித்துள்ளார். இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, காளி தேவியை இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக எடுத்துக் கொள்ள ஒரு தனிநபராக தனக்கு முழு உரிமை இருப்பதாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications