US Tariff: டிரம்புக்கு செக்.. அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் இந்தியர்கள்! ஆப்பிள் டூ கோககோலா வரை! லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். அதுமட்டுமின்றி நம் நாட்டின் பொருளாதாரம் குறித்து தரக்குறைவான கருத்துகளை பேசி வருகிறார். இதற்கிடையே தான் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் நாட்டில் செயல்பட்டு வரும் பிரபல அமெரிக்க நிறுவனங்களில் தயாரிப்புகளை பாஜகவினர் புறக்கணிக்க தொடங்கி உள்ள நிலையில் மற்றவர்களும் அதனை பின்பற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் அமெரிக்காவின் ‛டாப்' நிறுவனங்களுக்கு பெரிய அடி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு அந்த நிறுவனங்களின் லிஸ்ட்டுகள் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதில் முதற்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு இந்த மாத இறுதியில் அமலுக்கு வர உள்ளது.

amid-of-donald-trumps-us-tariff-indians-calls-to-boycott-american-goods-like-mcdonalds-apple-and

டிரம்பின் இந்த நடவடிக்கையால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க நம் நாடு பிற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தான் பிரபல அமெரிக்க நிறுவனங்களுக்கு ‛செக்' வைக்கும் வகையில் நம் நாட்டில் சைலன்ட்டாக வேலை செய்யப்பட்டு வருகிறது.

டிரம்புக்கு பாடம் புகட்டும் வகையில் பாஜகவினர் தற்போது அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை பறக்கணிக்க தொடங்கி உள்ளனர். அதன்படி அமெரிக்காவின் நிறுவனங்களான டோமினோஸ், மெக் டொனால்ட்ஸ், கேஎஃப்சி, கோககோலா, பெப்சி, ஸ்டார்பக்ஸ், அமேசான், ஆப்பிள், வாட்ஸ்அப், பேஸ்புக்கின் நிறுவனம் மெட்டா நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நம் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக மக்களும் வளர்ந்து வருகின்றன. தற்போது பலரும் உலகளவில் பிரசித்திப்பெற்ற நிறுவனங்களில் பொருட்களை வாங்கி பயன்படுத்தி தொடங்குகின்றன. இதற்கு உதாரணம் தான் ஆப்பிளின் புதிய ஐபோன்கள் விற்பனைக்கு வரும்போது நீண்டவரிசையில் நின்று மக்கள் அதனை வாங்கி செல்வதை நாம் பார்த்து இருக்கலாம். இப்படி நம் நாட்டை வைத்து அமெரிக்க நிறுவனங்கள் கல்லா கட்டுகின்றன. சமூகத்தில் நிலவும் ‛பிராண்ட் வேல்யூ' என்பது அமெரிக்காவின் நிறுவனங்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைகிறது.

இதனால் தான் அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களில் இந்திய மார்க்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதனால் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா தான் மிகப்பெரிய மார்க்கெட்டாக உள்ளது. இதற்கு நம் நாட்டின் மக்கள்தொகை தான் காரணம். நம் நாட்டின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டி உள்ள நிலையில் அதனை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் அதிகம் சம்பாதித்து வருகின்றன.

இந்நிலையில் தான் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை பாஜகவினர் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இதன்மூலம் உடனடியாக விற்பனை பாதிக்கப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை. இருப்பினும் தற்போது பாஜகவினர் அமெரிக்கா நிறுவனங்கள், அதன் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். சமூகவலைதளங்களில் இதுதொடர்பாக பதிவிட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களில் பலரும் அதனை யோசிக்க தொடங்கி உள்ளனர்.

இதனால் டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி விதிப்பு, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடு உள்ளிட்டவை தொடரும் பட்சத்தில் இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை மக்கள் புறக்கணிப்பது வரும் நாட்களில் அதிகரிக்கலாம். ஏனென்றால் நம் மக்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற நடவடிக்கையை தொடங்கினர்.

உதாரணமாக இந்தியா - பாகிஸ்தான் போரில் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்வது, துருக்கி நிறுவனங்களுடன் மேற்கொண்ட தொழில் ரீதியிலான ஒப்பந்தம், துருக்கி ஆப்பிள் உள்ளிட்டவற்றை நம் நாட்டு மக்கள் புறக்கணித்தனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான பிரசாரம் சக்சஸ் ஆகும் பட்சத்தில் அந்த நிறுவனங்கள் பெரும் இழப்பை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+