‛விடாத விவசாயிகள்’.. இன்று மத்திய அரசு 3ம் கட்ட பேச்சுவார்த்தை.. முடிவுக்கு வருமா டெல்லி போராட்டம்?
டெல்லி: டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் வலுவடைந்துள்ளது. விவசாயிகள், போலீசார் இடையே நேற்று 2வது நாளாக மோதல் நடந்த நிலையில் இன்று 3வது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பபடுமா? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2020-21 காலக்கட்டத்தில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடந்தது. இறுதியில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது.

இந்நிலையில் தான் தற்போது அதேபோன்ற போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா உள்பட பிற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்து வருகின்றனர். விவசாயிகள் தற்போது வரை டெல்லிக்குள் நுழையவில்லை. அவர்கள் பஞ்சாப், ஹரியானா எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதாவது வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
‛டெல்லி சாலோ' என்ற பெயரில் டெல்லியில் போராட்டம் நடத்தி தங்களின் கோரிக்கையை மத்திய அரசை நிறைவேற்ற செய்ய வேண்டும் என்பது தான் விவசாயிகளின் நோக்கமாகும். இந்த போராட்டம் நேற்று தொடங்கியது. பஞ்சாப், ஹரியானாவில் மாநிலங்களில் இருந்து 200க்கும் அதிகமான விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.
ஆனால் டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் பஞ்சாப்- ஹரியானா எல்லையான சம்புவில் விவசாயிகள் தடுக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மாநில அரசு, விவசாயிகளை உள்ளே நுழையவிடாமல் தடுக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றனர். இதனால் கண்ணீர் புகை குண்டுகள் நேற்று வீசப்பட்டது. இதனால் போர்க்களம் போன்ற சூழல் உருவானது.
மேலும் டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் தடுக்க ஹரியானா-டெல்லி எல்லையில் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2வது நாளாக போராட்டம் நடந்தது. போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. இந்த போராட்டம் இன்னும் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லையில் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதற்கிடையே தான் இந்த பிரச்சனையை சுமூகமாக முடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கி உள்ளது. அதாவத மத்திய அரசு தரப்பிலும் போராடும் விவசாய அமைப்புளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. தற்போது வரை 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அப்போது மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, ‛‛அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது'' என தெரிவித்துள்ளார் இதற்கு விவசாயிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதையடுத்து நேற்று இரவு 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் இந்த 3வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று இரவு நடக்கவில்லை. இந்த பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது விவசாயிகளை சமாதானப்படுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இதனால் இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா? விவசாயிகளின் போராட்டம் என்பது முடிவுக்கு வருமா? இல்லை தொடர்ந்து நடக்குமா? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications