ஷாக்.. டெல்லி மெட்ரோ ரயிலில் முகம்சுளிக்க வைத்த நபர்! அதுவும் சிறுமி முன்பு.. கொந்தளித்த பயணிகள்!
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் இரவு நேரத்தில் சிறுமி உள்பட பெண் பயணிகள் பயணித்த நிலையில் அவர்களின் முன்பு சுயஇன்பம் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் வேகமாக பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை நடைமுறையில் உள்ளது. இதனை தினமும் பல லட்சம் பேர் பயண்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபகாலமாக டெல்லி மெட்ரோ ரயிலில் நடக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் செல்போன் பார்த்துக்கொண்டே ஒருவர் சுயஇன்பம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு டெல்லி மெட்ரோவில் காதல் ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வரிசையில் தான் தற்போது இன்னொரு ஷாக்கான சம்பவம் டெல்லி மெட்ரோவில் நடந்துள்ளது. அதாவது நேற்று இரவு 8.30 மணிக்கு சிவப்பு நிற மெட்ரோ ரயிலில் சிறுமிகள், பெண்கள் என ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். நேற்றைய தினம் ரக் ஷா பந்தன் என்பதால் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் என்பது அதிகமாக இருந்தது. இந்த ரயிலில் சிறுமி ஒருவர் தனது தாயாருடன் பயணித்தார்.
மெட்ரோ ரயில் சீலம்பூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மெட்ரோ ரயிலில் இருந்த ஒருநபர் சுயஇன்பம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது தாயுடன் சீலம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினார். இதற்கிடையே தான் மெட்ரோ ரயிலில் இருந்த வேறு பயணிகள் அந்த நபரின் முகம்சுளிக்கும் செயலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து 2 பயணிகள் அவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் அந்த நபரை பிடித்து சாதாரா மெட்ரோ ரயில் நிலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதோடு சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுத. போலீசார் வந்த நிலையில் சுயஇன்பம் செய்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.
முதற்கட்ட விசரணையில் அந்த நபர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்த நிலையில் தற்போதும் அப்படியான நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications