நாளை இந்தியா வரும் ரஷ்ய அமைச்சர்! உக்ரைன் போருக்கு மத்தியில் விசிட்! பரபர பின்னணி
டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு மத்தியில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை, நாளை மறுநாள் என 2 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார். போருக்கு நடுவே அவரது இந்திய வருகை பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. போர் விஷயத்தில் இந்தியா நடுநிலைமை வகிக்கும் நிலையில் இவரது வருகை உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இன்னும் ரஷ்யாவின் இலக்கு எட்டப்படவில்லை. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைனும் ஆக்ரோஷமாக ரஷ்யாவை எதிர்த்து சமாளித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் இன்னும் சமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் போரும் முடிவுக்கு வரவில்லை.

படைகளை குறைக்க முடிவு
இருப்பினும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் ஒருபுறம் நடக்க மற்றொருபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் தற்காலிக போர் நிறுத்தம், மனிதர்கள் வெளியேற வழி ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்டவற்றுக்கு உதவி வருகிறது. இந்நிலையில் தான் துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையில் கீவ், செர்னோபில் பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகளைக் கணிசமாக குறைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா வரும் ரஷ்ய அமைச்சர்
இந்நிலையில் தான் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. அதில், ‛‛ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மார்ச் 31(நாளை), ஏப்ரல் 1 இந்தியா வருகிறார்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திப்பு யாருடன்
இதில் வேறு விஷயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களை சந்திக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ரஷ்யா-இந்தியா இடையே பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காரணம் என்ன
அதாவது இந்தியா-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக ஆயுத ஒப்பந்தம் உள்ளது. தற்போது ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியை பாதிக்குமா என்பது குறித்து இருதரப்பும் விவாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், பிற நாடுகளை போல் அல்லாமல் ரஷ்யாவின் பக்கம் தொடர்ந்து ஆதரவு அளித்து வர வேண்டும் என செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்தலாம் என கூறப்படுகிறது. இதுதவிர மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நிலையில் அவர் இந்தியா வருகிறார். இதன்மூலம் தங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதையும் அவர் மேற்குலக நாடுகளுக்கு எடுத்து கூறலாம்.

அமெரிக்க, பிரிட்டிஷ் பிரதிநிதிகள்
இவற்றை எல்லாம் தாண்டி அமெரிக்க அதிபர் ஜோபிடனின் ஆலோசகர்களில் ஒருவரும் அந்நாட்டு தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகருமான தலீப் சிங் இன்று மாலை இந்தியா வருகிறார். இவர் நாளை இரவு வரை இந்தியாவில் இருக்க உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரின் திடீர் இந்திய வருகை ரஷ்யாவுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதேபோல் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் நாளை இந்தியா வருகிறார். உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க அமெரிக்கா , பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிடம் வலியுறுத்தி வரும் நிலையில் தான் இவர்கள் 2 பேரும் இந்தியா வருகின்றனர்.

உற்றுநோக்கும் உலக நாடுகள்
இதுவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சுற்றுப்பயணத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள அமெரிக்கா, பிரிட்டிஷ் பிரதிநிதிகள் இந்தியாவில் இருக்கும் 2 நாட்களிலும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

போரில் இந்தியாவின் நிலை என்ன
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை பிப்ரவரி 24ல் துவங்கியது. அதன்பிறகு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.இந்நிலையில் தான் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும், உக்ரை்ன மீதான போர் நடவடிக்கை தொடர்பாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை ஓரம்கட்டினாலும் கூட இந்தியா அதை செய்யவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. பொதுவெளியில் ரஷ்யாவை இதுவரை இந்தியா விமர்சனம் செய்யவில்லை. மேலும் ரஷ்யாவை கண்டிக்கும் வகையிலான ஐநா தீர்மானங்களில் இருந்தும் இந்தியா விலகியதோடு, மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தாலும் ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து பொருட்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications