Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்புவை தொடர்ந்து தேவலாய சொத்துக்கள் டார்கெட்! ஆர்எஸ்எஸ் கட்டுரையை காட்டி ராகுல் காந்தி வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆர்.எஸ் எஸ் அமைப்பின் அடுத்த இலக்கு கத்தோலிக்க தேவாலய சொத்துக்களாக இருக்கலாம் என்று காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வக்பு மசோதா சர்ச்சைக்கு நடுவே, ஆர்.எஸ் எஸ் அமைப்புடன் தொடர்புடைய இதழ் வெளியிட்ட கட்டுரையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்து மசோதா ஒன்றை தயாரித்தது. இந்த மசோதா கடந்த ஆகஸ்டு மாதம் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

amid-row-over-waqf-bill-rahul-gandhi-warns-christian-community-might-be-the-next-target-of-the-rss

7 கோடி ஹெக்டேர் நிலங்கள்

இதில் மசோதா மீது பல்வேறு திருத்தங்கள் செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்தது. பின்னர் அந்த திருத்தங்களுக்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்தியில் ஆளும் பஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா நிறைவேறியது.

வக்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இதழில் வெளியான கட்டுரை சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ். எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஆர்கனைசர் என்ற ஆங்கில இதழின் இணையதளத்தில் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சொந்தமாக நாடு முழுவதும் 7 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளதாக வக்பு வாரியத்துடன் உள்ள சொத்துக்களை ஒப்பிட்டு இந்த கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.

அடுத்து கிறிஸ்தவர்கள் மீது கவனம்

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தை கையில் எடுத்ததும், இணையளத்தில் இருந்து அந்த கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், கத்தோலிக்க தேவாலய சொத்து விவரம் தொடர்பாக வெளியாகியிருந்த செய்தி லிங்கை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ராகுல் காந்தி கூறியிருந்ததாவது:-

வக்பு மசோதா முஸ்லீம்களை தற்போது தாக்குகிறது. எதிர்காலத்தில் பிற சமூகத்தினரையும் குறிவைப்பதற்கு இது முன்னுதாரணமாக இருக்கும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால், இதற்கு வெகு நாட்கள் ஆகவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது கிறிஸ்தவர்கள் மீது கவனத்தை செலுத்தியிருக்கிறது. இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து நமது மக்களை பாதுகாக்கும் ஒரே கேடயம் அரசியல் அமைப்பு மட்டுமே. இதை பாதுகாப்பது நமது கூட்டுக் கடமையாகும்" என்று பதிவிட்டு இருந்தார்.

பாஜகவின் அடுத்த மூவ்

ராகுல் காந்தி இந்த பதிவை வெளியிட்ட சிறிது நேரத்தில் ஆர்கனைசர் இணையதளத்தில் இருந்து பதிவு நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. வக்பு வாரிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது, பாஜகவின் கவனம் கத்தோலிக்க தேவாலய சொத்துக்கள் மீது திரும்பியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்க தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதாலா இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

"கத்தோலிக்க தேவாலய சொத்துக்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரை கண்டனத்திற்குரியது. கத்தோலிக்க சமூகத்திற்கு சொந்தமான சொத்துக்களை கட்டுப்படுத்துவதுதான் பாஜகவின் அடுத்த மூவ். லோக்சபா விவாதத்தின் போது, அடுத்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இப்போது வெளியிடப்பட்டது இல்லை

தற்போது ஆர்கனைசர் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரையில், 7 கோடி ஏக்கர்கள் அவர்களிடம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை கட்டுப்படுத்துவதுதான் அவர்களின் அடுத்த நடவடிக்கையாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆர்கனைசர் இதழின் எடிட்டர் பிராபுல் கேட்கர், இந்த கட்டுரை இப்போது வெளியிடப்பட்டது இல்லை. வக்பு வாரிய மசோதாவுக்கு பிறகு மீண்டும் வெளியாகியிருக்கிறது.

கேரளாவின் முன்பம் கிராம பிரச்சினை

பழைய செய்திகளை எடுத்து வருவதற்கு பதிலாக, ராகுல் காந்தி கேரளாவின் முன்பம் கிராம பிரச்சினைக்கு தீர்வு காணட்டும்" என்றார். கேரளாவின் முன்பம் கிராமத்தில் 400 ஏக்கர் நிலத்தை கேரள மாநில வக்பு வாரியம் உரிமை கோரியது. இதையடுத்து கிராம மக்களின் நில உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதையே பிராபுல் கேட்கர் குறிப்பிட்டு ராகுல் காந்தியை சாடியுள்ளார்.

முன்னதாக ஆர்.எஸ் எஸ் அமைப்புடன் தொடர்புடைய இதழிலில் இந்தியாவில் யாரிடம் அதிக நிலம் உள்ளது? என்ற பெயரில் கட்டுரை வெளியானது. அதில், நாட்டில் அரசுக்கு அடுத்தபடியாக கத்தோலிக்க தேவாலயங்களிடம் தான் அதிக நிலம் இருப்பதாகவும், பெரும்பாலான நிலங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டது எனவும் குறிப்பிடப்ப்பட்டு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+