யுஏபிஏ சட்டம் பாய்ந்தது.. முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கு தடை விதிப்பு.. அமித்ஷா அறிவிப்பு
டெல்லி: யுஏபிஏ சட்டத்தின் கீழ் முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் சையது அலி ஷா கிலானி தலைவராக இருந்த அனைத்து இந்திய ஹுரியன் மாநாட்டு அமைப்பின் தலைவராக இடைக்கால தலைவராக இருந்தவர் மசாரத் ஆலம். இவர் முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த அமைப்பு தேச விரோத, பிரிவினைவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை அமைத்திட வேண்டும் என பொதுமக்களை தூண்டுவதாகவும் கூறி மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பதிவில் தெரிவித்து உள்ளார். அதில், "மசாரத் ஆலமின் முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் கட்சி (MLJK - MA) வை சட்டவிரோத நடவடிக்கைகள் தடை சட்டம் (யுஏபிஏ) வின் கீழ் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறோம். இந்த அமைப்பும் அதன் நிர்வாகிகளும் ஜம்மு காஷ்மீரில் தேச விரோத செயல்களிலும், பிரிவினைவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு உள்ளார்கள். பயங்கரவாத செயல்களை செய்ததுடன், ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சி அமைய வேண்டும் என மக்களை தூண்டி விடுகின்றனர்.
The ‘Muslim League Jammu Kashmir (Masarat Alam faction)’/MLJK-MA is declared as an 'Unlawful Association' under UAPA.
— Amit Shah (@AmitShah) December 27, 2023
This organization and its members are involved in anti-national and secessionist activities in J&K supporting terrorist activities and inciting people to…
நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்பதை நரேந்திர மோடி அரசாங்கம் உரக்க சொல்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி 5 ஆண்டுகள் தடை விதித்தது மத்திய உள்துறை அமைச்சகம். அதன் தொடர்ச்சியாக முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்பை தடை செய்து இருக்கிறது மத்திய அரசு.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications