Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரு பிரதமரானதுதான் நாட்டின் முதல் வாக்கு திருட்டு! இந்திரா காந்தி ஜெயித்ததும் இப்படித்தான்-அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாக்கு திருட்டு குறித்து தனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன என, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு, "நேரு பிரதமரானதுதான் இந்தியாவின் முதல் வாக்கு திருட்டு. ரேபரேலியில் இந்திரா காந்தி வென்றதும் வாக்கு திருட்டு மூலம்தான். இந்திய குடியுரிமை பெரும் முன்னரே வாக்களித்தவர் சோனியா காந்தி" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை கடந்த நவம்பர் 5ம் தேதி அன்று நிகழ்த்தியிருந்தார். அதில், ஹரியானாவில் ஒரே வீட்டிலிருந்து 501 வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். தனது இந்த கேள்விக்கான பதில் என்ன என்பது குறித்து ராகுல் காந்தி மக்களவையில் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

Amit Shah Nehru vote

வாக்கு திருட்டு - விளக்கம்

இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. வீடு எண் 265 என்பது ஒரு சிறிய குடியிருப்பு அல்ல, அது ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பரம்பரை நிலத்தில் பல குடும்பங்கள் இணைந்து வாழும் குடியிருப்பு. எனினும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி வீட்டு எண்கள் ஒதுக்கப்படவில்லை, எனவே அவர்களின் வீட்டு எண் 265 என்று மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், அந்த குடும்பங்களில் ஒன்றில் மூன்று தலைமுறையினர் ஒன்றாக வாழ்கின்றனர்.

வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு

இந்த வீட்டு எண் முறை, ஹரியானாவில் காங்கிரஸ் அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே நடைமுறையில் உள்ளது. இது போலி வீடும் அல்ல, போலி வாக்குகளும் அல்ல. ஊடுருவல்காரர்கள் ஒரு நாட்டின் பிரதமரையும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையும் முடிவு செய்தால், எந்தவொரு நாட்டின் ஜனநாயகமும் பாதுகாப்பாக இருக்குமா? ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருக்கக் கூடாது. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கக் கூடாது. இதுதான் வாக்காளர் பட்டியலைச் சுத்திகரிப்பதாகும்" என்று விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவின் முதல் வாக்கு திருட்டு

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் முதல் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில்தான் முதல் வாக்குத் திருட்டு நடந்தது. அப்போது பிரதமர், மாகாண காங்கிரஸ் தலைவர்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அந்த வாக்குகளில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 28 வாக்குகள் கிடைத்தன. ஜவஹர்லால் நேருவுக்கு வெறும் இரண்டு வாக்குகள் மட்டுமே. இருந்தபோதிலும், நேருவே பிரதமராக்கப்பட்டார்.

இரண்டாவது வாக்கு திருட்டு

இரண்டாவது வாக்குத் திருட்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நிகழ்ந்தது. தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும், இந்திரா தனக்கு சட்ட பாதுகாப்பு அளித்ததால் இது நடந்தது. சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுமுன் வாக்காளரான விவகாரம் தற்போது சிவில் நீதிமன்றங்களில் உள்ளது. இது மூன்றாவது வாக்குத் திருட்டு.

காங்கிரஸ் கட்சியின் தொடர் தேர்தல் தோல்விகளுக்கு அதன் தலைமையே காரணம். காங்கிரஸ்காரர்கள் வாக்குகளைத் திருடியும், ஊடுருவல்காரர் பாதுகாப்பு பேரணியும் நடத்தியது. இருப்பினும் பீகாரில், எங்கள் அரசு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.

காங்கிரஸ் தோல்விக்கு காரணம்

நாட்டில் தேர்தலில் தோற்கும்போது தேர்தல் ஆணையம், தேர்தல் செயல்முறை மற்றும் வாக்காளர் பட்டியல்களை அவதூறு செய்கிறார்கள். அவர்களது தோல்விக்கு உண்மையான காரணம் தலைமையே அன்றி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களோ அல்லது வாக்காளர் பட்டியலோ அல்ல. ஒரு நாள், காங்கிரஸ் தொண்டர்களே தங்கள் தலைவர்களிடம் இத்தனை தேர்தல்களில் எப்படி தோற்றீர்கள் என்று கேள்வி கேட்பார்கள்" என்று கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். அமித்ஷாவின் பேச்சை கண்டித்து வெளிநடப்பும் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+