பாக் மீது இந்தியா நடத்திய இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா புகழாரம்
டெல்லி: இந்தியா, பாகிஸ்தானுக்கிடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது குறித்து பாஜக அமித்ஷா தனது டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டியில் இந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது.
இதன் இறுதி போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் மான்செஸ்டரில் நேற்றைய தினம் இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கேரள ஜோதிடர்
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே சுமூக உறவு இல்லை. இதனால் இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும் என ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அதற்கேற்ப கேரள ஜோதிடர் ஒருவரும் அவ்வாறே கணித்தார்.

இரு முறை போட்டி ஒத்தி வைப்பு
இதையடுத்து முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. அதில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி ஆடிய போது மழை குறுக்கிட்டதால் இரு முறை போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தியா
மழையால் பாகிஸ்தானுக்கு 40 ஓவர்களில் 302 ரன்களை குவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 6 விக்கெட் இழப்புக்கு 40 ஓவர்களில் 212 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது. இதனால் 89 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானுடனான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியா தோற்றதில்லை என்ற நம்பிக்கையை இந்தியா காப்பாற்றி விட்டது.

கிரிக்கெட் போட்டி
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில் இந்தியாவின் வெற்றி குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது பெருமை அளிக்கிறது.
|
அமித்ஷா பாராட்டு
சிறப்பான ஆட்டத்துக்கு எனது பாராட்டுகள். இந்த வெற்றியானது பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகும். ராணுவத்தினர் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் ஏற்பட்ட முடிவே தற்போது இந்திய அணியினரால் நடந்த ஸ்டிரைக்கிலும் ஏற்பட்டுள்ளது என அமித்ஷா பாராட்டியுள்ளார். அது போல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அசோக் கெலாட் மெஹபூபா முஃப்தி ஆகியோரும் பாராட்டியுள்ளனர்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications