3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா.. மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித்ஷா..!
3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா இன்று தாக்கலாகிறது
டெல்லி: 3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
சர்வதேச அளவில் ஜப்பானின் டோக்கியோ மாநகராட்சிக்கு பிறகு 2வது பெரிய மாநகராட்சியாக இருந்த டெல்லி மாநகராட்சி விளங்கியது.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டு, வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி என்று 3-ஆக பிரிக்கப்பட்டது.

3 மாநகராட்சிகள்
அப்போதிலிருந்து, 3 மாநகராட்சிகளும் பாஜகவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. ஆனால், இந்த மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க இயலாமை போன்ற நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன. காரணம், 3 மாநகராட்சிகளிடையே வருவாயில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது... வார்டுகளும் சமமாக பிரிக்கப்படவில்லை... அதனால், நிதி தட்டுப்பாடு காரணமாக, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..

சம்பளம்
இதனால் 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இறுதியில், இந்த சிக்கல்களை தீர்க்க 3 மாநகராட்சிகளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது... டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டத்திருத்த மசோதா-2022 க்கு மத்திய அமைச்சரவை கடந்த 21 ம் தேதி ஒப்புதலும் அளித்தது.

ஆம் ஆத்மி
இதற்கு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.. 3 மாநகராட்சிகளையும் இணைப்பதன் மூலம் தோல்வியில் இருந்து காப்பாற்றலாம் என்று ஊழல் பாஜக நினைத்தால், டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பாஜகவின் தவறான எண்ணங்களை மாநகராட்சி தேர்தலில் விரைவில் அகற்றுவார்கள் என்றும் மாநகராட்சி தேர்தலில் தோல்வியை தவிர்ப்பது பாஜகவால் சாத்தியமற்றது என்றும் ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது.

அமித்ஷா
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத்திருத்த மசோதா-2022 வை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார்.,..ஒன்றாக இணைப்பதன் மூலம், பாஜக - ஆம் ஆத்மி இடையிலான அரசியல் மோதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி 3 மாநகராட்சிகளையும் ஒன்றாக இணைப்பதன் மூலம், பாஜக - ஆம் ஆத்மி இடையிலான அரசியல் மோதல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications