"2026ல் தமிழகத்தில் என்டிஏ அரசு அமையும்.." அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா?
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை சந்திது பேசியிருந்தார். இதற்கிடையே தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணியை உறுதி செய்யும் விதமாக 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என்று அமித் ஷா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இத்தனை காலம் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக சொல்லி வந்த நிலையில், திடீரென அவர்கள் தங்கள் அரசியல் டோனை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். திமுகவை வீழ்த்த தேவையான கூட்டணியை அமைக்கவுள்ளதாகக் கூறி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் இன்று திடீரென டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்
எடப்பாடி பழனிசாமியின் இந்த டெல்லி பயணம் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை நடந்து வருகிறது. அப்படியிருக்கும் போது செவ்வாய்க்கிழமை காலை திடீரென அவர் டெல்லி சென்றார். முதலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே டெல்லி சென்ற நிலையில், அதன் பின்னரே அதிமுக நிர்வாகிகள் டெல்லிக்கு போய் இருக்கிறார்கள்.
அரசு காரை தவிர்த்த எடப்பாடி பழனிசாமி
அப்போதும் கூட முதலில் அதிமுக அலுவலக திறப்பிற்காகவே டெல்லி சென்றுள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், எடப்பாடி பழனிசாமி அதே பதிலை அளித்தார். மேலும், அவரது பயணத் திட்டம் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. அரசு கார்களில் சென்றால் அரசு ஊழியர்கள் மூலம் எங்குச் செல்கிறோம் என்பது தெரிந்துவிடும் என்பதால் அவர் அரசு காரை தவிர்த்துள்ளார். அவர் தனியார் கார்களில் பயணித்த நிலையில், அந்த ஏற்பாடுகளை அதிமுக ராஜ்யசபா எம்பி சி வி சண்முகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அமித் ஷா உடன் சந்திப்பு
இந்தச் சூழலில் தான் நேற்று மாலை 7 மணியளவில் அமித் ஷா இல்லத்திற்கு எடப்பாடி பழனிசாமி தனது நிர்வாகிகள் உடன் சென்றார். முதலில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் மட்டும் தனியாக சுமார் 15 நிமிடங்கள் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. அதில் கூட்டணி குறித்தே பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இதற்கிடையே தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணியை உறுதி செய்யும் விதமாக 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என்று அமித் ஷா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கூட்டணி உறுதி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்ற போதிலும் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பைத் தொடர்ந்து அவர் இப்படிப் பதிவிட்டுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.
அமித் ஷா ட்வீட்
அதாவது அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தனது உரையின் ஒரு பகுதியைப் பகிர்ந்து அதற்கு இதுபோல கேப்ஷன் குறிப்பிட்டுள்ளார். இது அதிமுக பாஜக இடையே கூட்டணி அமைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளதையே காட்டுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications